Thursday, June 7, 2018

இங்கிலாந்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த புகலிடக்கோரிக்கையாளர்: நாடுகடத்த உத்தரவு

இங்கிலாந்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகலிடக்கோரிக்கையாளருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து Cardiff Crown நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
18 வயது இளம்பெண் தனது பிறந்தநாளன்று Cardiff இரவு விடுதியில் தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு விட்டு விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது, இப்பெண் மதுபோதையில் இருப்பதை அறிந்துகொண்ட புகலிடக்கோரிக்கையாளரான முகமது அமின்(39) என்பவர் அப்பெண்ணிடம் சென்று, உங்களை வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் எனக்கூறி தனது காரில் ஏற்றிக்கொண்டார்.
இப்பெண்ணை தனது வீட்டிற்கு பின்புறம் அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் மதுபோதையில் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். இந்நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் மதுபோதையில் இருந்து தெளிந்த அப்பெண், தனக்கு நேர்ந்தவை குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி முகமதை கைது செய்து, அவர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணையில் முகமது அமின், எகிப்து நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் புகலிடம் கோரி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முகமது மறுத்துள்ளார். ஆனால் சாட்சியங்கள் இவருக்கு எதிராக இருந்ததையடுத்து 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைதண்டனைக்கு பிறகு எகிப்து நாட்டுக்கு இவர் நாடுகடத்தப்படவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

http://news.lankasri.com/uk/03/180563?ref=ls_d_uk

No comments:

Post a Comment