Thursday, June 7, 2018

அகதிகள் விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறதா பிரான்ஸ்? கொதிக்கும் அகதி


மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்தவருக்கு குடியுரிமை அளிக்கும் அதே நேரத்தில் நெருப்பு பற்றி எரியும் வீடு ஒன்றிற்குள் நுழைந்து இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றிய டுனிஷியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றும் பிரான்ஸ் இரட்டை வேடம் போடுகிறதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் பாரீசில் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை மாலி நாட்டைச் சேர்ந்த Mamoudou Gassama (22) என்பவர் சற்றும் யோசிக்காமல் கைகளில் எந்த உபகரணங்களும் இன்றி மாடிகளில் தாவித்தாவி ஏறி குழந்தையைக் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அந்த நபரை அழைத்து அவருக்கு குடியுரிமை அளிப்பதாக வாக்களித்து அவருக்கு தீயணைப்பு துறையில் ஒரு வேலையும் கிடைக்க வழிவகை செய்தார்.

அதே நேரத்தில் Ayman L என்னும் டுனிஷியா நாட்டைச் சேர்ந்த முறையான ஆவணங்கள் இன்றி வந்த ஒரு நபர் 2013 ஆம் ஆண்டில் ஒரு வீட்டில் தீப்பற்றி எரியும்போது தனது உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தனது ஒரு நண்பர் மற்றும் உறவினருடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து அந்தக் குழந்தைகளை மீட்டார்.
முறையான ஒரு IT டிப்ளமோ சான்றிதழ் இருந்தும் அவருக்கு பிரான்சில் வாழும் அனுமதி மறுக்கப்பட்டு அவரை பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாடியிலிருந்து தொங்கிய குழந்தையை காப்பாற்றியது வீரதீரச் செயல் என்றால் தீயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றியது வீரதீரச் செயல் இல்லையா? என்கிறார் அவர்.
அவரது வீரதீரச் செயலைக் கருத்தில் கொண்டாவது அவரது விண்ணப்பத்திற்கு சாதகமாக செயல்படுமாறு உள்ளூர் மேயர் கேட்டுக்கொண்ட பிறகும் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
Mamoudou Gassamaவின் செயல் வீடியோ எடுக்கப்பட்டதுபோல நாங்கள் வீடியோ எடுத்து வைக்கவில்லை இதுதான் தவறா என்று வருத்தத்துடன் கூறுகிறார் Ayman Lஇன் வழக்கறிஞர்.


http://news.lankasri.com/france/03/180582?ref=ls_d_france

No comments:

Post a Comment