Tuesday, June 5, 2018

பிரித்தானியாவில் தொடர் வெற்றிகள் பெற்று சாதனை படைத்த ஈழத் தம்பதியினர்

பிரித்தானியா கரோ நகரத்தில், கடந்த மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற நகரசபை தேர்தலில் ஈழத்தைச் சேர்ந்த, புலம்பெயர் தமிழர்களான சுரேஸ் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி சசி சுரேஸ் ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிரித்தானியாவில் கரோ நகரத்தில் மேயராக நகராட்சி ஆண்டு 2015 தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றிய இவர்கள் மீண்டும் இம்முறை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
கணவன் மனைவி இருவரும் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்ற இந்த சம்பவம் பிரித்தானிய வரலாற்றில் ஒரு வரலாற்று நிகழ்வாக பதிவாகியுள்ளது.
கரோ நகரத்தில் மேயராக இருந்த சுரேஸ் கிருஷ்ணா பல்வேறு அபிவிருத்தி வேலைகளை இதுவரையில் செய்து வந்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் இலங்கை தமிழ் குடும்பம் கணவன் மனைவியாக ஒரே கட்சியில் ஒரே தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றமை சரித்திரத்தில் இடம்பெறாத சாதனைகளாக கருதப்படுகின்றது.
இவர்கள் இருவரும் ஈழத்தில் நெல்லியடியை சேர்ந்தவர்கள், தற்போது புலம் பெயர்ந்து லண்டன் கரோ பகுதியில் வசித்து வருகின்றனர். இவரது மனைவி யாழ். நீர்வேலி பகுதியை பிறப்பிடமாக உடையவர்.
இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணா கரோ நகர உள்ளூர் அரசாங்க அமைச்சரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். (நகராட்சி ஆண்டு 2018/2019 ) அத்துடன், சமூக ஒற்றுமை மற்றும் குற்றத்திற்கான அமைச்சரவை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் பிரிட்டனில் இந்த பதவியை ஏற்கும் முதல் தமிழ் கவுன்சிலர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





http://www.tamilwin.com/uk/01/184562?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment