Thursday, June 14, 2018

இங்கு குடிக்க தண்ணீர் இல்லை! இலங்கைக்கு அனுப்பிவையுங்கள் என தீக்குளிக்க முயன்ற இளைஞர்

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கொழும்பு பீசர்மேன் பீச் பகுதியைச் சேர்ந்தவர் சாய். இவருக்கு அஜய் குமார்(30) என்ற மகன் உள்ளார்.
இவர்கள் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அஜய்குமார் தான் கேனில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இச்சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரை தடுத்து கேணிக்கரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த இளைஞரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், நான் 7 வயதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். வந்ததில் இருந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்துவருகிறேன். எனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல விரும்புகிறேன்.

கடந்த 2015-ஆம் ஆண்டு கள்ளப்படகில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல முயன்றபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டேன்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நீதிமன்றம் என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டும், அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கவில்லை.
நான் தங்கியிருக்கும் மண்டபம் அகதிகள் முகாமிலும் போதுமான மின்வசதி இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்க பலமுறை கூறியும் அனுப்பி வைக்காததால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தேன் என்று கூறியுள்ளார்.

http://news.lankasri.com/srilanka/03/181101?ref=ls_d_world

No comments:

Post a Comment