Saturday, June 9, 2018

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இலங்கை அமைச்சர் விடுத்துள்ள விசேட கோரிக்கை!


தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பா.ரஞ்சித்திக் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டாம் என அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷிடமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் ரஜினியின் தீவிர ரசிகர் எனவும், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டாரின் சுயரூபத்தை வீணடிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் இயக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஜினி - பா.ரஞ்சித் இயக்கத்தில் திரைப்படம் உருவானால் அதற்கு எதிர்ப்புகளுக்கு அவசியம் இருக்காது. இயக்குனரே எதிரியாக ரஜினியின் கதாபாத்திரத்தை வீணடிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தை தான் அதிக நேசிப்பதாகவும், தான் அவரை எடுத்துக்காட்டாக எடுத்து கொண்டிருப்பதாகவும், இதனால் ரஞ்சித்தின் படத்தினால் ரஜினிக்கு உரிய இடம் கிடைக்காதென்பது குறித்து தான் உட்பட ரஜினி ரசிகர்கள் வருத்தம் வெளியிடுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/statements/01/185043?ref=imp-news

No comments:

Post a Comment