Saturday, June 9, 2018

அகதிகள் கொள்கையையே மாற்றுமா இந்த சிறுமியின் மரணம்: மெர்க்கலிடம் பதிலில்லை

14 வயது Susannaவின் மரணம் ஜேர்மனியின் அகதிகள் கொள்கையையே மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மே மாதம் 22 ஆம் திகதி காணாமல் போன Susanna என்னும் 14 வயது யூதச் சிறுமியை அவளது பெற்றோர் பின்னர் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.
Ali Bashar என்னும் ஈராக் அகதி அவளை துஷ்பிரயோகம் செய்து கொன்று புதைத்துவிட்டு நாட்டை விட்டு தப்பி விட்டான். இந்த சம்பவம் ஜேர்மனியின் சேன்ஸலரான மெர்க்கலின் பதவிக்கே பங்கம் விளைக்கும் அளவில் ஜேர்மனியில் பூதாகரமாகியுள்ளது.
சில அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகளுக்கு புகலிடம் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து அதற்கு நாடாளுமன்ற விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இந்த கொலை அந்த பிரச்சனையை இன்னும் பெரிதாக்கியுள்ளது.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் Ali Bashar, அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு ஜேர்மன் சான்ஸலர் மெர்க்கல், பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு எல்லையைத் திறந்து விட்ட சில நாட்களுக்குப்பின் ஜேர்மனிக்கு வந்தவன்.
2016 ஆம் ஆண்டு புகலிடம் மறுக்கப்பட்ட Ali Basharஇன் மேல் முறையீடு நிலுவையில் இருந்ததால் அவன் ஜேர்மனியில் தங்க அனுமதிக்கபட்டான்.
ஜேர்மனியின் பிரபல பத்திரிகை ஒன்று “Ali Bashar நாடு கடத்தப்பட்டிருந்தால் Susanna இப்போது உயிருடன் இருந்திருப்பாள்” என்ற தலைப்பில் இரண்டு பக்கங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த செய்தி புயலைக் கிளப்பியுள்ளது.
AfDயின் துணை தலைவரான Alice Weidel, Susannaவின் மரணத்திற்கு பொறுப்பேற்று சேன்ஸலர் மெர்க்கல் மற்றும் அவரது மொத்த கேபினட்டும் பதவி விலக வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
நாட்டிலுள்ள தந்தைகளும் தாய்மார்களும் இனி தங்கள் குழந்தைகளுக்கு என்ன நேருமோ என பயப்படாதிருக்க வேண்டுமானால், புகலிடக் கொள்கைகளை சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டு ஏற்படுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
நடு நிலை அரசியல்வாதிகளும் ”கொலை செய்த அந்த அகதி எப்படி நாட்டை விட்டு வெளியேறினான்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் நாடும் நாடாளுமன்றமும் கொதிக்கும் நிலையிலும் “2015 ஆம் ஆண்டு
எடுக்கப்பட்டது மனிதநேய அடிப்படையிலான முடிவு” என்று மட்டும் கூறியுள்ளார்.
மெர்க்கலின் பதவி நிலைக்குமா? கூட்டணிக் கட்சியினர் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்குள் இன்னும் எத்தனை உயிர் போகுமோ?


http://news.lankasri.com/germany/03/180736?ref=ls_d_germany

No comments:

Post a Comment