Saturday, June 9, 2018

உங்கள் ரகசியங்களை காட்டி கொடுக்கும் பானை வயிறு! இதில் நீங்க எந்த வகை..?

என்றாவது ஒருவரது குணாதியங்கள் அவரது உடல் உறுப்பு வகை கொண்டு அறிய முடியுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா? மூக்கின் வடிவம், கன்னம், விரல் நகத்தின் வடிவம் என்று பலவன சார்ந்து தனிப்பட்ட நபர்களின் குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்று கூறுவார்கள்
அதே போல, ஒரு நபரின் தொப்பையின் வடிவத்தை வைத்தும் கூட, அவரது பொதுவான குணாதியங்கள் என்னவாக இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியுமாம்... இது மொத்தம் ஆறு வகைகளாக பிரித்து காணப்படுகிறது.

தொப்பை - 01
  • இப்படியான தொப்பை கொண்டவர்கள் நிச்சயம் ஃபிட்னஸ் மீது ஆர்வம் கொண்டவராக தான் இருக்க வேண்டும்.
  • எதிலும் சிறந்து செயற்பட வேண்டும் வெற்றி அடையவேண்டும் என்ற தூண்டுதல் இவர்களிடம் காணப்படும். இவர்களிடம் பொறுமையும், உன்னிப்பாக கவனிக்கும் பண்பும் இருக்கும்.
தொப்பை - 02
  • இப்படியான தொப்பை கொண்டவர்கள் நேர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்டவர்கள். சகஜமாக பழகக்கூடிய நபராகவும் இருப்பார்கள். எதை பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக இயங்கும் நபராக இருப்பார்கள்.
தொப்பை - 03
  • இப்படியான தொப்பை கொண்டவர்கள் அட்ரீனல் வகை என்று கூறுகிறார்கள். இவர்கள் பழக இதமான, எளிமையான, நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். பலரும் இவர்களுடன் இருப்பதை என்ஜாய் செய்வார்கள்.
தொப்பை - 04
  • இப்படியான தொப்பை கொண்டவர்கள் தைராய்டு வகை எண்டு கூறுகிறார்கள். இவர்கள் எதையும் எளிமையாக எடுத்துக் கொள்வார்கள்.
  • கூட்டத்தில் இருக்கும் போது இனிமையாக பேச விரும்புவார்கள். இவர்கள் யாரையும் ஜட்ஜ் செய்ய முயல மாட்டார்கள். ஒருவரை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். அமைதியாக இருப்பது இவர்களது இயற்கை குணாதிசயமாக காணப்படும்.
தொப்பை - 05
  • இப்படியான தொப்பை கொண்டவர்கள் வலிமையான, போல்டான, நிமிர்ந்த பழக்கம் கொண்டிருப்பார்கள். தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.
  • உள்ளதை உள்ளபடி பேசும் குணம் கொண்டிருக்கும் இவர்கள், பிறர் மனம் புண்படும் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.
தொப்பை - 06
  • இப்படியான தொப்பை கொண்டவர்கள் ஓவரி வகை என்று கூறப்படுகிறது. தனக்கு எது சரி என்று படுகிறதோ, அதை தான் செய்வார்கள்.
  • அது குறித்து உலகம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தனிப்பட்ட நபராக காணும் போது, போராடும் குணம் கொண்டிருப்பார்கள். யாருடைய உதவியும் நாட மாட்டார்கள். தன்னால் முடிந்த, தன் திறமைக்கு உட்பட்டவற்றை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி செல்வார்கள்.

No comments:

Post a Comment