Saturday, June 2, 2018

சூப்பர் ஹீரோக்களுக்கு மட்டும்தான் பிரான்ஸ் புகலிடம் தருமா? அகதிகள் குறித்து வெளிவராத அவலங்கள்

திங்கட்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மாலியிலிருந்து முறையான ஆவணங்களின்றி வந்த Mamoudou Gassama என்னும் நபரைச் சந்தித்ததுதலைப்புச் செய்தியானது.
அதற்கு இரண்டு நாட்களுக்குமுன் அந்த நபர் நான்காவது மாடியிலிருந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைக் காப்பாற்றினார். ஒரு ஹீரோ பிறந்து விட்டார், அவருக்கு ஸ்பைடர் மேன் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது.
புலம்பெயர்தலுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் கொள்கைகளும் நிறைந்த பிரான்சில், திடீரென அந்த நபர்மீது சமூக ஊடகங்களுக்கு பாசம் பொங்கி வழிய ஆரம்பித்தது.

அனைவரும் அவருக்கு குடியுரிமை கொடுத்தே ஆக வேண்டும் என சிறு பிள்ளை போல் அடம் பிடிக்க ஆரம்பித்தனர்.
பெரும்பாலோர் ”அவர் ஒரு பிரெஞ்சுக் குழந்தைக்காக தனது உயிரையே பணயம் வைத்தார், அவர் நம்மில் ஒருவராக ஆவதற்கு முற்றிலும் தகுதியுள்ளவர்” என கருத்து தெரிவித்தனர்.
இது நடந்து இரண்டே நாட்களில் மேக்ரான் அவருக்கு குடியுரிமை பெறுவதற்கான வழிகளைத் திறந்து விட்டதோடு, பாரீஸ் தீயணைப்புத்துறையில் அவர் ஒரு வேலையையும் பெற்று விட்டார்.
Gassamaவின் தைரியம் கௌரவிக்கப்பட்டதை மக்கள் கொண்டாடும் அதே நேரத்தில், ஆவணங்கள் இன்றி வந்த ஒரு நபரின் புது வாழ்வுக்கும் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்தவர்களின் போராட்டம் நிறைந்த அன்றாட வாழ்வுக்கும் இடையிலான முரண்பாடு முகத்தில் பளீரெனத் தாக்குகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட புலம்பெயர்தல் மற்றும் சிறப்பான புகலிடம் குறித்த மசோதா ஒன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது மிக மிகக் குறைவான ஆதரவையே அது பெற்றது.
தற்போது ஆளும் மெஜாரிட்டியைச் சேர்ந்தவர்களிடையே அது கருத்து வேறுபாடுகளை வேறு ஏற்படுத்தியது.
புலம்பெயர்தலை இந்தக் கோனத்தில் பார்க்கும் இந்த நாட்டில் Gassama மட்டும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியிராவிட்டால் பொலிசாரின் கண்ணில் படக்கூடாது என அஞ்சி மறைந்து வாழும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரில் ஒருவராகத்தான் இருந்திருப்பார்.
ஏனென்றால் ஒரு கைது நடவடிக்கை அகதி என்னும் நிலைமையை பெறுவதற்காக வருடக்கணக்காக எடுத்த முயற்சிகளையும் செய்த தியாகங்களையும் முற்றிலும் அழித்து விடும்.
ஒரு பக்கம் Gassamaவை ஹீரோவாக தூக்கி வைக்கும் இதே பிரான்சில் இன்னும் பல பிரான்ஸ் நாட்டவர்கள், துயருற்றிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு உதவியதற்காக தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
Gassamaவுக்கு உதவியதன்மூலம் வெளியுலகுக்கு தன்னை நல்ல பிள்ளைபோல் காட்டிக்கொள்ளும் பிரான்ஸ் இன்னொரு பக்கம் புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதோடு புலம்பெயர்வோருக்கு உதவுபவர்களையும் தண்டிக்கவும் வழி தேடிக்கொண்டிருக்கிறது.
பிரான்சில் புகலிடம் பெறவேண்டுமானால் சூப்பர் ஹீரோக்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலை தயவு செய்து வேண்டாம்.

http://news.lankasri.com/france/03/180240?ref=ls_d_france

No comments:

Post a Comment