Thursday, June 14, 2018

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட ராஜதந்திரிகளைச் சந்தித்தார்கள் புலம்பெயர் தமிழர்கள் !


சிறிலங்கா அரசு உலகளாவிய ரீதியில் எடுத்த முன்னெடுப்புகள் காரணமாக தன் மீது இருந்த அழுத்தங்களைக் குறைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது எதிர்வரும் மார்ச் 2019இல் முடிவுக்கு வரும் ஐஇ நா. மனித உரிமைக் கழகத் தீர்மானத்திற்குப் பின் முற்று முழுதாக சர்வதேசத்தின் கடப்பாடுகளிலிருந்து வெளியேற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நாடுகளை மையப்படுத்தி சிறிலங்கா அரசு எடுக்கும் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து எதிர்வினை ஆற்றவும் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து தப்பி விடாமல் இருக்கும் செயல்திட்டங்களை ஏனைய புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் பிரித்தானிய தமிழர் பேரவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திரிகளுடனான முக்கியமான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
இன்று நடந்த சந்திப்புகளின் போது 2017இல் ஐரோப்பிய ஒன்றியம் மீள வழங்கிய GSP + தொடர்பாகவும் மனித உரிமைகள் பற்றிய விடயங்கள் தொடர்பாகவும் பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு முடிவுகளை மீளாய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.




http://www.ibctamil.com/diaspora/80/102020?ref=home-imp-flag

No comments:

Post a Comment