Thursday, June 7, 2018

இன்றைய கனேடிய மாகாண தேர்தலில் ஒவ்வொரு தமிழரும் வாக்களிப்போம், தமிழராய் எழுவோம்!

நேற்றிரவு நான் செய்த ஒரு பதிவு எதற்காக என்ற கேள்வி எழுந்தமையை நான் அறிவேன். அக்கருத்துக்களை தாயக அரசியலுடன் ஒப்பிடலாம் தமிழகத்துடன் ஒப்பிடலாம்.
அதேவேளை இன்றைய கனடிய தமிழர் அரசியல் நிலைமைகளுடன் ஒப்பிடலாம் என கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் அர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்....
அவரவர் தம் நிலை சார்ந்து அத் தொப்பியை போட்டுப் பார்த்துக் கொண்டனர். அது ஒன்றை சொல்லி நிற்கிறது. தமிழர் துன்பியல் நிலை எங்கிருந்தாலும் ஒன்றே என்பதையே. ஆனால் அதில் நான் முதன்மைப்படுத்தியது இன்றைய கனடிய நிலையையே.
ஒன்ராரியோ மாகாணத் தேர்தலை மையப்படுத்தி அதுவும் தமிழ் வேட்பாளர்களை மையப்படுத்தி தமிழ் அரசியல் கையாளப்பட்ட விடயம் எவ்வளவு பாரதூரமானது என்பதை எவ்வளவு பேர் புரிந்து கொண்டார்கள் என்பது தான் எனது உச்ச விசனத்தின் பின்புலம்.
அது குறித்து எவ்வித பொறுப்புணர்வும் இன்றி பகிரப்பட்ட வன்மங்கள் ஒருபுறம். தமிழர்கள் தான் அனைத்தின் பின்புலம் என செய்திகளை வெளியிட்ட மைய ஊடகங்களே போட்டுடைத்தார்கள். ஆகமொத்தத்தில் தமிழ் இனத்தை கனடிய தேசிய நீரோட்டத்தின் முன் துயிலுரித்ததில் எம்மவர் சிலருக்கு அத்துனை ஆனந்தம்.
எம்மவர் குறித்து பிரதான கட்சிகளான லிபரல் என்டிபி மற்றும் கன்சவேட்டிவ் கட்சியை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் மத்தியில் இருந்த அபிப்பிராயத்தை முதன்முறையாக உங்கள் முன் வைக்கிறேன். தமிழ் வேட்பாளர்கள் குறித்தும் சில தமிழர்களையும் கட்சித்தலைவர்களை மையப்படுத்தியும் பல தகவல்கள் கட்சிகளுக்கு முதலில் தமிழர்கள் சிலரால் அனுப்பிவைக்கப்பட்டன.
அவை சமூக வலைத்தளங்களில் முதலில் பகிரப்பட்டே அனுப்பப்பட்டன. இவ்வாறு அனுப்பப்படும் போது அவை எவ்வித தாக்கத்தை கட்சிக்கு ஏற்படுத்தும் என்ற பரபரப்பே முதலில் அவர்களிடம் இருந்தது. அது குறித்து அபிப்பிராயங்கள் உள்ளார்ந்த ரீதியாக திரட்டப்பட்டன. அவை சில என் கவனத்திற்கும் வந்து சென்றன. பின்னர் அதனால் உந்தப்பட்டவர்கள். தமிழ் சமூக வலைத்தள பகிர்வுகளை அவதானிக்கவும் தலைப்பட்டனர். நான் பெரிது நீ பெரிது என எங்களுக்குள் அரங்கேறிய அவலங்கள் அலங்கோலங்கள் தமிழ் சமூகத்தை குறிவைத்து சில தரப்புக்களின் பகிர்வுகளும் அவர்களின் பார்வைக்கு தப்பவில்லை.
இதன் பாதிப்பின் ஆழம் இதனை முன்னெடுத்து களிப்புற்ற எத்தனை பேருக்கு புரியும் என்பது அதீத கவலை தருகிறது. சமூக அக்கறையுள்ளவர்கள் போல் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு சமூகத்தை துயிலுரிந்த இவர்களின் செயல் அருவருக்கத்தக்கது. கட்சிகள் தாம் முன்வைத்த விடயத்தில் பெரிதாக நகரவில்லை என்றதும் தீனி;கிடைக்காதா என்றலைந்த ஊடகங்களுக்கு நேரடியாகவே வழங்க ஆரம்பித்தனர்.
அதுவே இறுதி நாட்களில் நடந்தேறிய பேரவலம். இதன் பின்னணியிவ் இருந்தவர்கள் யார் என தேடியபோது அவர்கள் தங்கள் விடயத்தில் மிகவும் தெளிவுடன் செயற்பட்டதையும் காண முடிகிறது. அவர்களின் பின்புலம் பலவாறாக இருந்தன. வேதனை என்வென்றால் புலனாய்வு அற்ற இனமான நாம் இவ்விடயத்தில் பலரும் அவர்களின் வலையில் பலியாகிபோனது தான் பெரும் துன்பியல் நிகழ்வு. கட்சிகள் விடயத்தில் உள்ளார்ந்த இக்குத்துக்கள் தமிழர் சார்ந்த பாரிய வடுவாக மாறிவிட்டது தான் பெரும் துயர் தருகிறது.
அரசியல் என்பது பெரும் கடல் அதன் ஆழம் உயரம் அகலம் தன்மை செயற்பாடு என எதனையும் குறித்த அறிவின்றிய எமது செயற்பாடு அபாயகரமானது. மேலும் விபரமாக தேர்தலின் பின்னர் விரிவாக வருகின்றேன்.
124 தொகுதிகளுக்கான இன்று நடைபெறும் தேர்தலில் 825 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி நிலவரப்படி கன்சவேட்டிவ் கட்சி குறைந்த ஆசனங்கள் பெரும்பான்மையுடன் பெரும்பான்மை ஆட்சி அமைக்கும். அதன் இறுதி நிலவரம் 68 முதல் 75 ஆசனங்களில் அமையலாம். என்டிபி பலம் பொருந்திய எதிர்கட்சியாக அமையும்.
ஆட்சியமைக்கும் நிலையை அடைவதற்கு பலம்குறைந்த கன்சவேட்டிவ் ஆசனங்களிலான உடைப்பை பெரிதாக அதனால் இறுதியில் எட்டமுடியாமலே போனது. அதன் இறுதி ஆசனங்கள் 48 முதல் 55 ஆக அமையலாம். லிபரல் கட்சியின் தோல்லி வரலாறாகவே அமையப்போகிறது. அது 1 முதல் 5 ஆசனங்களுக்குள்ளேயே அடங்கிவிடும் நிலை. உத்தியோகபூர்வ கட்சி அஸ்தஸ்திற்கு 8 ஆசனங்களைப் பெற்றாக வேண்டும். அது பெரும் சவாலாக அமையப் போகிறது.
இன்னொரு விடயம் பெரும் கரிசனையை ஏற்படுத்தப் போகிறது. மக்களின் வாக்களிப்பு வீதம். அது வரலாற்றுக் குறைவாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் வேட்பாளர் விடயத்தில் உள்ளக கட்சிகளின் கணிப்புகளையும் உள்வாங்கி ஸ்காபுரோ ரூச்பார்க்கில் கன்சவேட்டிவ் தமிழ் வேட்பாளருக்கும் என்டிபி வேட்பாளருக்குமிடையிலேயே போட்டி நிலவுகிறது.
ஸ்காபுரோ கில்வூட்டைப் பொறுத்தவரை க்னசவேட்டிவ் கட்சி தமிழ் வேட்பாளருக்கும் லிபரல் கட்சி வேட்பாளருக்குமிடையிலேயே போட்டி. மார்க்கம் தோன்கில்லை பொறுத்தவரை கன்சவேட்டிவ் தமிழ் வேட்பாளருக்கும் லிபரல் தமிழ் வேட்பாளருக்குமிடையிலேயே போட்டி. இதில் ஈற்றில் யார் வெல்வார்கள் என்பதை இப்போதே சொல்வது பொருத்தமல்ல என்பதால் தவிர்த்துவிடுகின்றேன்.
தமிழ் உறவுகளே அனைத்து உரிமைகளிலும் உயரியது உங்கள் வாக்களிக்கும் உரிமை தவறாது இதுவரை முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்களிக்காதோர் இன்று வாக்களித்து விடுங்கள்.


http://www.canadamirror.com/srilanka/04/175334?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment