Saturday, June 2, 2018

இன்னொரு முகத்தைக் காட்டிய கனடா பிரதமர்: அடிப்படை அறிவு கூட இல்லை என விளாசல்

எப்போதும் எல்லோருக்கும் இன்முகமே காட்டும் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளை அடுத்து அமெரிக்க அதிபரை அடிப்படை அறிவு கூட இல்லை என்று விளாசித் தள்ளிவிட்டார்.
ஜஸ்டின் ட்ரூடோவா இப்படி என்று பலரும் ஆச்சரியமாகப் பார்க்க வேறு சிலரோ அதை ஆமோதிப்பதோடு பிரதமரின் இந்த முகம் அவருக்கு வரும் தேர்தலில் வெற்றியைப் பெற்றுத்தரும் என பாராட்டியுள்ளனர்.
முன்பு அமெரிக்கா, கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் உலோக வரிகளில் விலக்கு அளித்திருந்தது.

தற்போதோ அது கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு 25 சதவிகிதமும் அலுமினியத்திற்கு 10 சதவிகிதமும் வரி விதித்துள்ளது.
அடிப்படை அறிவுடனாவது அவர்கள் செயல்படுவார்கள் என்று எண்ணினோம், ஆனால் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கை அவ்வாறு இல்லை என்று ட்ரூடோ கூறியுள்ளார்.
வரிகளை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்வோம் என்று அவர் கூறியிருந்தாலும் அமெரிக்கா இதுவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே நிற்கிறது.
கனடா நல்லெண்ணத்துடனேயே பேச்சு வார்த்தைகள் நடத்தியது, ஆனால் ஒரு அளவுக்கு மேல் போனால் நீங்கள் எங்கள் முகத்தில் குத்தினால் நாங்கள் திருப்பிக் குத்துவோம் என்று அவர் கூறினார்.
இதுவரை அனைத்து நாடுகளுடனும் இன்முகம் காட்டி வந்த கனடா பிரதமரின் இந்த உறுதியான செயல்பாட்டிற்கு பலரும் பாரட்டுத் தெரிவித்துள்ள நிலையில், கனடா ஒட்டாவா பல்கலைக்கழக பேராசிரியரான Patrick Leblond, பிரதமரது நடவடிக்கை வரும் தேர்தலில் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கனடா இந்த நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டது, அதை புரிந்து கொள்ளாதது டிரம்பின் தோல்வி என்று அவர் கூறினார்.

http://news.lankasri.com/canada/03/180205?ref=rightsidebar-tamilwin

No comments:

Post a Comment