Saturday, June 9, 2018

4000 இலங்கை குழந்தைகள் நெதர்லாந்தில்!! அம்பலமாகும் திடுக்கிடும் உண்மைகள்..

பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்காவைச் சேர்ந்ததாய்மார்களால் வெளிநாட்டவர்களிடம் தத்துக்கொடுத்த பிள்ளைகளில் நான்காயிரம் பேர் நெதர்லாந்தில் இருப்பதாகதகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல பகுதியில் பிறந்துநெதர்லாந்து வளர்ந்த சந்தமாலி என்ற சன பொஃன் ரொஷன் என்ற யுவதி, இவ்வாறுவளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளையும் பெற்றோரையும் மீண்டும் நேரில்சந்திக்க வைப்பதற்க செயற்திட்டமொன்றை ஸ்ரீலங்காவில் ஆரம்பித்திருக்கின்றார்.


நெதர்லாந்து பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டசன பொஃன் ரொஷன் என்ற இளம் யுவதி ஸ்ரீலங்காவிற்கு திரும்பியுள்ளதுடன், பிள்ளைகளைவெளிநாட்டவர்களுக்கு தத்துக்கொடுத்த தாய்மார்கள் சிலரை இணைத்துக்கொண்டு கொழும்புவிகாரமாதேவி பூங்காவில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து தமதுபிள்ளைகளை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்குதத்துக்கொடுத்த தாய்மார்கள் இருப்பார்களால் அது குறித்த தகவல்களைதெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில்துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யும் நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
1980 களில் இருந்து இன்றுவரை ஸ்ரீலங்காவைச் சேர்ந்த நான்காயிரம் பிள்ளைகள் நெதர்லாந்திற்குஅழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தனது ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்காவில்பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த சன பொஃன் ரொஷன் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை மிகவும் விசாலமானது.இவர்களில் பலர் தங்களை பெற்ற தாய்மாரை தொடர்ச்சியாக தேடிவருகின்றனர் என்கின்றார் சன் பொஃன் ரொஷன்.
தான் திரட்டிவரும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்திதத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளைகளையும் இரத்த உறவுகளையும் மீண்டும் இணைப்பதற்குத்தேவையான தரவுகள் அடங்கிய தரவுக் களஞ்சியமொன்றை நெதர்லாந்து அரசின் ஆதரவுடன்அமைப்பதே சன பொஃன் ரொஷனின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இந்தத் தகவல்களை திரட்டி அவற்றைநெதர்லாந்து அரசுக்கு ஒப்படைத்து DNA தரவுகள் அடங்கிய வங்கியொன்றைநிறுவுவதற்கான நிதியை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். DNA வங்கிக்கு பெறுந்தொகைப் பணம் தேவைப்படுகின்றது. அதனால் பிள்ளைகளைத்தத்துக்கொடுத்த தாய்மார்களின் கதைகளை எடுத்துக்கூறி நெதர்லாந்து அரசை DNA வங்கிக்கான பணத்தை கொடுக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சன் பொஃன் ரொஷன் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களுக்கு பிள்ளைகளைத் தத்துக்கொடுத்தபெற்றோர்கள் இருப்பின் 0774289289 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டுதெரியப்படுத்துமாறு சன பொஃன் ரொஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்படசிறுவர்களை பணத்திற்காக வெளிநாடட்வர்களுக்கு விற்ற பாரிய மோசடியொன்றுஇடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலானஅரசாங்கம் 2017 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டிருந்தது.
1980 களில் பிறந்த கைக்குழந்தைகள் 11 ஆயிரம்பேரை தத்தெடுத்த ஐரோப்பிய நாட்டவர்களுக்கு விற்ற பாரிய மோசடி தொடர்பில்நெதர்லாந்திலுள்ள முன்னணி ஊடகமொன்று அம்பலப்படுத்திய புலனாய்வுத் தகவல்களை அடுத்து,குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணையொன்றை நடத்தப் போவதாக ஸ்ரீலங்காஅரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னகடந்த ஆண்டு உறுதிப்படுத்தியும் இருந்தார்.

http://www.ibctamil.com/srilanka/80/101702?ref=rightsidebar

No comments:

Post a Comment