Friday, June 8, 2018

தமிழர்களால் 30 ஆண்டுகளாக எவ்வாறு போராட முடிந்தது? கோத்தாவின் ஆய்வில் வெளியான தகவல்

தமிழ் மக்களினால் 30 ஆண்டுகள் எவ்வாறு தொடர்ச்சியாக போராட முடிந்தது என்பது குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு கிழக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு, கிழக்கில் அப்போது ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1977 தொடக்கம் 2009வரை தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழர்களினால் எவ்வாறு யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அந்த ஆய்வாகும்.
தமிழ் மக்களின் சுயசார்பு பொருளாதாரம் பலமாக இருக்கும் வரை தமிழர்களுக்கு சிந்திக்க நேரமிருக்கும் என்பதே அந்த ஆய்வில் கிடைத்த முடிவாகும்.
எனவே, தமிழர்களுகளின் சுயபொருளாதார வலு உடைந்துவிட்டால், சோறா? சுதந்திரமா? என்ற நிலை அவர்களுக்கு உருவாகும்.
உதாரணமாக மலையகத் தமிழ் மக்கள் போல பொருளாதார ஸ்திர நிலையை உடைத்து விட்டால், தமிழர்களது அரசியல் விடுதலைக் கோரிக்கை தாமாகவே நீர்த்துப்போகும் என்பது அவர்களின் கணக்கு என சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாக இருக்கும். சிந்திக்க நேரம் இருக்காது என திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தங்களது அடிப்படை பொருளாதார இருப்பை அடையவிடவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தமிழர்களின் நிதிப் பொருளாதார நிலை ஓரளவு ஸ்திரத் தன்மையிலேயே இருந்தது.
எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பிரமிட் வியாபாரம் என்பனவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/parliment/01/184899?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment