Friday, June 1, 2018

ஆயிரம் பேர் உயிர் போவதை தடுக்கவே 13 பேர் சுடப்பட்டார்கள்: தமிழிசை

தூத்துக்குடி போராட்டத்தில் காவலர்களால் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது ஆயிரம் பேர் உயிர் இழப்பதை தடுப்பதற்காக என்று பாஜகவை சேர்ந்த தமிழிசை கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை, தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது வருத்தமாக இருக்கிறது. கொடூரமான வன்முறை ஒன்று நடைபெற்று கொண்டிருக்கும்போது 13 பேர் கொல்லப்பட்டது 1000 பேர் உயிரிழப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறது.

போராட்டங்கள் தீவிரமடையும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளால் திசை திருப்பப்படுகின்றனர். பயங்கரவாதிகளை தமிழ்நாடு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியிருந்தால் தூத்துக்குடி போராட்டம் இப்படி முடிந்திருக்காது என்று கூறி இருக்கிறார் தமிழிசை.
மேலும் எஸ் வி சேகர் பற்றியும் காவிரி ஆணையம் பற்றியும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
எஸ் வி சேகர் மீது நிச்சயம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார், காவிரி ஆணையத்திற்கான பதிலில் 120 ஆண்டுகளாக நீடித்த காவிரி பிரச்னையை தீர்க்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/india/03/180169?ref=home-latest

No comments:

Post a Comment