Friday, May 11, 2018

சிவிலியனின் மார்பகம் என்ன அவ்வளவு மலிவா? அழுதுகொண்டே புகார் அளித்த மாணவி!


மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு முறைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தேர்வை நடத்தி முடித்துவிட்டது.
இந்நிலையில், இந்த தேர்வால் மாணவிகள் பலரும் பல அசிங்கங்களை சந்தித்துள்ளனர் என்று தான் கூற வேண்டும்.
டாக்டரிடமும், வக்கீலிடமும் எதையும் மறைக்க கூடாதுதான். அதற்காக டாக்டர் படிப்பில் சேருவதற்காக தேர்வு எழுத வந்த மாணவியை அது தெரிந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் பிரேசியரை கழட்டு என்று சொன்ன தேர்வுக்குழுவால் துடிதுடித்து போனது பெற்றோர்களின் மனம்.
கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு, பிள்ளைகளை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்ற 2 தந்தைகள் மரணம் என நீட் தேர்வு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த குளறுபடிக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தான் காரணம் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நீட் தேர்வு தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள மாநிலம் பையனூர் அருகேயுள்ள குன்கிமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு ஆங்கில பள்ளியில் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நீட் தேர்வு எழுத சென்றுள்ளார்.
அப்போது, வரை மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தனர். பிரெஸ்ட் பகுதியில் ஸ்கேன் செய்தபோது பீப் சவுண்டு கேட்டிருக்கிறது. மெட்டல்ல ஆன விஷயத்தை உள்ளே வெச்சிருக்கியா என்ன? என்று கேட்டபோது பிரேசியர்ல உள்ள கூக் (கொக்கி) மெட்டல். அதான் வேற ஒண்ணுமில்லை. என்று அந்த பெண் தயங்கி கூற, அப்போ அதை கழட்டி வெச்சுட்டு வா மெட்டல் இல்லாத பிராவை போடு. . எனக்கு மெட்டல் வெச்ச பிராதான் முக்கியம்னா எக்ஸாம் எழுதாதே, போயிடு. காரணம் எங்களுக்கான ரூல்ஸ் அப்படி. என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், அந்த மாணவி, பாத்ரூமில் சென்று கழட்டிட்டு வரவா என்று கேட்டபோது அதற்கும் அனுமதிக்காமல் அங்கேயே கழற்றுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார்களாம்.
இதுகுறித்து குறித்த மாணவி அழுது கொண்டே பாலக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதே போன்று கண்ணூர் மாவட்டத்தில் இப்படி உள்ளாடையை கழட்ட வேண்டிய நிலை இன்னும் சில இளம்பெண்களுக்கு வந்தது என்கிறார்கள். சில இடங்களிலோ டாப்பின் அலுமினிய பட்டன்கள் அகற்றப்பட்டதால், அப்பாவை அனுப்பி புதிய டாப் வாங்கி வரச்சொல்லி அழுதுகொண்டே அணிந்ததாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளாடையை கழட்ட சொன்ன விவகாரம் வெடித்துக் கிளம்பிய பின் எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் நிச்சயம் விரிவாக விசாரனண நடத்த தயார். என்று கூறியுள்ளது கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
இந்நிலையில், பொது இடத்தில் தன் மகள் உள்ளாடையை கழட்டிக் கொண்டு வந்து நிற்பதை நினைத்தால் அந்த நிமிடத்தில் கண்டிப்பாக மருத்துவ படிப்பு அவசியமா? என பெத்த மனசு அவமானத்தில் துடிக்கிறது என பெற்றோர்கள் கதறுகின்றனர்.
மேலும், ஒரு மந்திரியின் மகளையோ அல்லது எம்.எல்.ஏ.வின் மகளையோ இந்த தேர்வுத்துறை அதிகாரிகளால் பிராவை கழட்டிட்டு வாம்மா! என்று சொல்லிவிட முடியுமா? சிவிலியனின் மார்பகம் என்ன அவ்வளவு மலிவா! என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்
http://www.manithan.com/india/04/172188?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment