Tuesday, May 29, 2018

>உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? சிறுநீரகம் பாதித்து விட்டதாம்

நம் உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி உடலின் ஆரோக்கியத்தை காக்கிறது சிறுநீரகம்.
சமீககாலமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
பலரும் நோயின் ஆரம்ப நிலையில் கண்டறியாமல் நோய் முற்றியவுடன் அறிந்து கொள்கின்றனர்.
எந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிறுநீரில் மாற்றம்
நுரை போன்ற சிறுநீர், இயல்பை விட அதிகமாக அல்லது குறைவான அளவு, ரத்தம் கலந்த சிறுநீர், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருப்பது- இதுபோன்ற பிரச்சனைகள் முதலில் தென்படும்.

வீக்கம் மற்றும் வெடிப்பு
சிறுநீரை வெளியேற்றாமல் அவதிப்படும் போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் உண்டாகும்.
அத்துடன் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும்.

ரத்தசோகை
சிறுநீரகம் சுரக்கும் எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோன் ஆக்ஸிஜன் மற்றும் சிவப்பணுக்களை கொண்டு செல்லும், இந்த ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை உருவாகும், இதனால் அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு இருக்கும்.

மூச்சுத்திணறல்
ரத்த சிவப்பு அணுக்களில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, நச்சுக்கள் வெளியேறாத காரணத்தினாலும் மூச்சுத்திணறல் உருவாகலாம்.
இத்துடன் சிலருக்கு குமட்டலும் இருக்கும், ஒரு சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி இருக்கும்.
இன்னும் சிலருக்கு மூச்சுக்காற்று கூட துர்நாற்றத்துடன் இருக்கும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நலம்.


http://news.lankasri.com/disease/03/179912?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment