Monday, May 21, 2018

சனிக்கிழமைகளில் சனிஸ்வரனை இப்படி வழிப்பட்டால் கோடி நன்மைகள் உண்டாகுமாம்!


ஜோதிட கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் சனி கிரகம் ஆகும்.
நாம் செய்யும் பாவ புண்ணியங்களைக் கொண்டே சனி பகவான் தன் அணுகூல பார்வையையும் உக்கிர பார்வையையும் நம் மீது வீசுகிறார்.
எனவே உங்கள் ஜாதகத்தின் படி சனிப் பார்வை இருந்தால் அவரின் அகோர பார்வையை குறைக்க அவரை வழிபட்டு அவரின் ஆசிர்வாதத்தை பெற்றாலே போதும்.
சனி பூஜை நன்மைகளை அள்ளித் தரும் மாபெரும் பூஜையாகும். இந்த சனி பூஜை சனிக்கிழமையில் செய்யப்படுகிறது.
சனி பூஜை எவ்வாறு செய்வது?
இந்த பூஜை விடியற்காலை முதல் பகல் வரை நீடிக்கிறது. விடியற்காலையிலயே பக்தர்கள் எழுந்து உடம்பு முழுவதும் எள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
அந்த நாள் முழுவதும் கருப்பு ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
அந்த நாள் முழுவதும் எள் எண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.
சனிபகவனின் அருளை பெற
விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்க வேண்டும்.
பிறகு கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும்.
மலர்களை சமர்பித்து சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும்.
பூஜையின் முடிவில் சனி காயத்ரி மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பிரசாதம் படைத்து ஆர்த்தி காட்டதல் அவசியமானதாகும்.
நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை திரும்பவும் செய்ய வேண்டும்.
விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் சாதம் சமைத்து சாப்பிட வேண்டும்.
கண்டிப்பாக விரதத்தின் போது அசைவ உணவை சாப்பிடக் கூடாது.
இந்த பூஜை முறைகளை பின்பற்றி வழிபட்டால் சனி பகவானின் அருளை பெற்று நிம்மதியான வாழ்வு வாழலாம்.
சனிபகவனை எவ்வாறு வழிப்படுதல்
கடவுள் கணேசனின் திருவுருவம் கொண்ட படம், சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம்.
அப்படி உங்களுக்கு இது கிடைக்கவில்லை என்றால் பீடத்தின் முன் அமர்ந்து மனதில் அவரை மனசார நினைத்து பூஜை செய்யுங்கள்.
ஹனுமானை நீங்கள் வழிபட்டு வந்தாலும் சனி பகவானின் கூடுதல் அருளை நீங்க பெற இயலும்.
சிவ பக்தர்கள் சனி பூஜையை சிவ பூஜையுடன் சேர்த்து வணங்கலாம். எந்நாளும் நன்மை கிட்டும்.
சனி பகவானுக்கு பிடித்தமானவை சனிக்கிழமையில் எள் எண்ணெய் குளியல், காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும்.
உளுந்து, கருப்பு எள்ளு இரத்தினம், கருப்பு எருது, மாடு, கருப்பு ஆடைகள், கருப்பு நிற காலணிகள் போன்றவற்றை தானமாக வழங்குதல்.
மேலும் ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்குதல்.
இந்த தானத்தை சனி பூஜை அன்று செய்தால் மிகவும் விசேஷம்.

http://news.lankasri.com/spiritual/03/179139?ref=ls_d_others

No comments:

Post a Comment