Tuesday, May 29, 2018

ஆண்களுக்கான நீச்சல் குளத்தில் குதித்து கலாட்டா செய்த பெண்கள்: காரணம் !!


பிரித்தானியாவின் Hampsteadஇலுள்ள ஆண்களுக்கான நீச்சல் குளம் ஒன்றிற்கு திடீரென வருகை தந்த சில பெண்கள் நீரில் குதித்து கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்கள் உடை அணிந்த ஒரு பெண்ணும், ஒட்டு தாடி அணிந்த ஒரு பெண்ணும் தாங்களும் ஆண்கள்தான் என்று கூறி நீச்சல் குளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினர்.
அவர்கள் அமைதியை குலைப்பதாகக் கூறிய பொலிசார் அந்தப் பெண்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

அப்போதுதான் அந்தப் பெண்கள் தாங்கள் ஆண்கள் நீச்சல் குளத்திற்கு வந்த காரணத்தை விளக்கினர்.
பெண்கள் கூட்டத்தின் தலைவியான Amy Desir (30) கூறும்போது, வரும் கோடைக் காலத்தில் ஒரு புதிய சட்டம் வரவிருப்பதாகவும், தங்களை பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு பெண்களுக்கு கொடுக்கப்படும் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் அனைத்தும் கொடுக்கப்படும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தாங்கள் இவ்வாறு ஆண்கள் நீச்சல் குளத்தில் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

இதனால் பெண்கள் மட்டும் பயன்படுத்தும் இடங்களில் மோசமான ஆண்கள் பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Hampsteadல் மூன்று நீச்சல் குளங்கள் உள்ளன, ஆண்களுக்கு மட்டும் ஒன்று, பெண்களுக்கு மட்டும் ஒன்று, இரு பாலரும் இணைந்து குளிக்கும் நீச்சல் குளம் ஒன்று.

இதில் கடந்த டிசம்பரில் திருநங்கைகளுக்கு ஆதரவாக பெண்களின் நீச்சல் குள நிர்வாகிகள், தங்களை பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் ஆண்களை பெண்களின் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிப்பதற்காக அதன் விதிகளை மாற்றிக் கொண்டனர்.
இந்தப் பிரச்சனையை வெளிக் கொண்டு வருவதற்காகவே அந்தப் பெண்கள் தங்களை ஆண்கள் என்று கூறிக்கொண்டு ஆண்களுக்கான நீச்சல் குளத்தில் இறங்கி கலாட்டா செய்தது தெரியவந்தது.

http://news.lankasri.com/uk/03/179921?ref=ls_d_uk

No comments:

Post a Comment