Wednesday, May 9, 2018

பட்டப்பகலில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் யார்?


காரைதீவில் இன்று வயோதிபர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 70 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அவர் ''சாப்பாடு... சாப்பாடு" என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் பேசவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று பகல் 12.40 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குறித்த வயோதிபரை ஆட்டோவில் கொண்டுவந்து காரைதீவு 12ஆம் பிரிவில் நடுத்தெருவில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு கிடைத்த தகலுக்கமைய வயோதிபர் கிடந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீதியில் கிடந்த அந்த வயோதிபரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தார்.
மேலும், அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கும் அறிவித்தல் கொடுத்ததன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
யார் ஆட்டோவில் வந்து வயோதிபரை கொண்டுவந்து இங்கு போட்டார்கள்? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்தப்படத்திலுள்ள வயோதிபரை இனங்காண உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/182208?ref=home-latest

No comments:

Post a Comment