Tuesday, May 29, 2018

ஒர் இனம் என்று சொல்ல!!


சில காலங்களாகவே என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வேதனை. ஒர் இனம் என்று சொல்லவதற்கு மொழி, கலாச்சாரம்,வதிவிடம் இந்த முன்றுமே அடிப்படை. இதில் வதிவிடம் என்பதை புலம்பெயர் தமிழர்கள் மாற்றி விட்டோம், தாயகத்தில் வதிவிட ஆக்கிரமிப்பு, மொழி அழிப்பு,கலாச்சார சீரழிவுகள் நடந்த வண்ணமே உள்ளது. மொழி!!! புலத்தில் இப்போது உள்ள மூத்த சந்ததியினருடன் சரி அரைவாசிக்கு மேல் அழிந்துவிடும் அதேபோல் கலாச்சாரத்தை புலத்து தமிழர்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு நாடு மாற்றிக்கொண்டே உள்ளோம். உடை கலாச்சாரத்தை கண்எடுத்து பார்க்க முடியவில்லை, வெள்ளைக்காரன் தோத்துவிட்டான், வாழ்க்கை முறை சொல்ல தேவை இல்லை. உலகில் தமது கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ளும் ஒரு இனம் என்றால் அது தமிழ் இனமே. வெள்ளைக்காரன் தனது வளத்தைப் பெருக்கிக் கொள்கிறானே தவிர தனது கலாச்சாரத்தை மாற்றவில்லை. எமது பிள்ளைகள் பாடசாலைகளில் பல் இனக் கலாச்சாரத்தை பற்றி படித்து விட்டு வந்து நம்மிடம் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி கேட்கும் போது என்ன சொல்வது என்று சிந்திக்க வேண்டியே உள்ளது. மொழி அழிந்தால் இனம் அணிவதற்கு சமம். எம் இனத்தை காக்க வேண்டும் என்றால் நாம் எமது பிள்ளைகளுடன் தமிழில் கதைப்பதையும் அவர்கள் தமிழ் கதைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். எமது பிள்ளைகள் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதை நாம் செய்ய தவறுவோமானால் நாம் மிக பெரிய வரலாற்றுப் பிழை செய்தவர்கள் ஆகி விடுவோம். அதைவிட இன்று நாம் அன்றைய அரசியல் தலைவர்களை திட்டுவது போல் எமது பிள்ளைகள் எம்மையும் சேர்த்தே திட்டுவார்கள் என்பது நிச்சயம்.


Gunarajah Valluvan

என் கருத்து:ஓர் இனம் என்று சொல்லவதற்கு மொழி, கலாச்சாரம்,வதிவிடம் இந்த முன்றுமே அடிப்படை!!உண்மைதான் நண்பா, நம்மிடம் மொழி இல்லை,கலாச்சாரமும் இல்லை(உண்மையில் உடை,நடை பாவனை நமக்கு தமிழர் கலாச்சாரப்படியா இருக்கு?நம் பாடசாலை உடை என்ன?நாம் சாதரணமாக அணியும் அணிகள் எவை?உணவு?கோயில் இருக்கு,பக்தராக நாம் போகும் முறை சரியா?ஆக தமிழ் இனம் ஏற்கனவே மொழி,கலாச்சாரம்,வதிவிடம் ஆகிய அனைத்தாலும் புலம்பெயர் தேசத்தில் அழிந்துவிட்டது!தமிழ்நாட்டில் வதிவிடம் மட்டும் உண்டு!ஈழத்திலும் வதிவிடம் உண்டு,சுருங்குகின்றது!

No comments:

Post a Comment