Monday, May 28, 2018

தொண்டை வலி, இருமலுக்கு மருந்து: வீட்டிலேயே தயாரிக்கலாம்

வெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.
இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.
தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
தேனுடன் இஞ்சி சாறு
ஒரு டீஸ்பூன் இஞ்சிச்சாறுடன், ஒரு டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும், இரண்டும் சம அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
தேனில் Anti Inflammatory துகள்கள் இருப்பதால் வைரஸ், பக்டீரியாவை ஒழிக்கும், இஞ்சி இயற்கையாகவே பக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
இஞ்சியுடன் நீர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து விடுங்கள்.
சுமார் 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதித்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கி தேன் கலந்து பருகலாம்.
எலுமிச்சையுடன் தேன்
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், தேன் இரண்டு டீஸ்பூன் மற்றும் மிளகுப் பொடி அரை டீஸ்பூன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
மிளகுடன் நீர்
ஒரு கப்பில் சூடான தண்ணீருடன் தேன் மற்றும் மிளகுத் துள் சேர்த்து கலக்கி குடிக்கலாம்.
மஞ்சளுடன் தேன்
மிதமாக சுடவைக்கப்பட்ட தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளைக் சேர்த்து முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள், இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

http://news.lankasri.com/medical/03/179791?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment