Thursday, May 24, 2018

>தூத்துக்குடியில் பொலிஸ் அராஜகத்தை ஆதரித்து வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எழுந்த போராட்டத்தில் பொலிஸ் தாக்கப்படுவதாக கூறி பிக் பாஸ் காயத்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மேலும் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்ட பின்னர் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மக்களை வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.
பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் பொதுமக்கள் சேர்ந்து பொலிஸ்காரரை தாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
இது மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையேயான போர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் அனைவரும் பொலிசார் மக்களை காயப்படுத்தியது, சுட்டது ஆகியவற்றை தான் பார்த்தோம்.
பொலிசாருக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கவில்லை. அதனால் தான் இந்த வீடியோவை வெளியிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் காயத்ரி ரகுராமின் குறித்த வீடியோவுக்கு பதிலளித்த நெட்டிசன்கள், அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற அராஜகத்தை எப்படி உங்களால் ஆதரிக்க முடிகிறது?
மேலும் அந்த சம்பவமானது காயம்பட்ட பொலிசாரை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பும் காட்சிகள் எனவும், தேவையின்றி உண்மையை திரித்து கூற வேண்டாம் எனவும் கொந்தளித்துள்ளனர்.

http://news.lankasri.com/india/03/179566?ref=ls_d_india

No comments:

Post a Comment