Wednesday, May 16, 2018

குற்றம் செய்ய நினைத்தாலே போதும், நாடு கடத்தல்தான்: சுவிஸ் உச்சநீதிமன்றம்


குற்றம் செய்தால்தான் தண்டனை என்று அல்ல குற்றம் செய்ய முயன்றாலே தண்டனைதான் என்று சுவிஸ் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சில குற்றங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலே வெளி நாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று நேற்றைய தினம் ஒரு வழக்கில் சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜார்ஜியாவை சேர்ந்த ஒரு நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதற்காக அவனை நாடு கடத்தும்படி Aarauவிலுள்ள கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுவிட்சர்லாந்தின் உயரிய நீதிமன்றமாகிய ஃபெடரல் நீதிமன்றம் உறுதி செய்தது.
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மனிதன் இரண்டு கூட்டாளிகளுடன் தனியாக அமைந்திருந்த ஒரு வீட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
வீட்டின் உரிமையாளர்கள் திரும்ப வந்து விடவே கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர், சிறிது நேரத்திற்குள் அவர்கள் மூவரும் உள்ளூர் பொலிசாரிடம் சிக்கினர்.
சுவிஸ் சட்டப்படி வீட்டை உடைத்து கொள்ளையடிப்பது ஒரு கிரிமினல் குற்றம், குற்றம் செய்பவர்கள் கண்டிப்பாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
கீழ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த அந்த நபர், தான் கொள்ளையடிக்க முயற்சி மட்டுமே செய்ததாகவும் கொள்ளையடிக்கவில்லை என்றும் வாதிட்டான்.
கொள்ளையடித்தாலும் சரி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாலும் சரி கண்டிப்பாக அந்த நபர் நாடுகடத்தப்பட வேண்டும் என்னும் சட்ட பிற்சேர்க்கையை மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம் அவனது வாதத்தை ஏற்க மறுத்து கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

http://news.lankasri.com/swiss/03/178908?ref=ls_d_swiss

No comments:

Post a Comment