Thursday, May 17, 2018

கனடியரின் உயிரை காப்பற்றிய இலங்கைத் தமிழர்! கனடாவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்


கனடாவில் ரயிலில் சென்றுகொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற கனடியரின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கனடாவின் ஒண்டாரியோவிலுள்ள Ryerson பல்கலைக்கழக மாணவர் Aeron Soosaipillai(20), கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கம்போல ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது ரயில் பாலத்திலிருந்து சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவரைக் கண்டதும் Aeronக்கு ஏதோ தவறாகப் பட்டது. உடனடியாக ரயிலை விட்டு இறங்கிய Aeron அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தவாறே அவரை நோக்கி வேகமாகச் சென்றார்.
Aeronஇடம் பேச விரும்பாத அந்த மனிதர் அவரை திட்டிக் கொண்டே பாலத்தின் மையப்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கவலையும் கோபமும் முகத்தில் தோன்ற பாலத்தின் ஓரத்திற்கே சென்றுவிட்ட அந்த மனிதரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தார் Aeron.
“எனக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்று Aeron சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாலத்தின் கீழே பொலிசார் போக்குவரத்தை தடை செய்யத் தொடங்கியிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்த மனிதன் நெஞ்சை நெகிழச்செய்யும் ஒரு காரியத்தைச் செய்தார்.

தன்னுடைய குழந்தையின் ஷூவை Aeronஇடம் கொடுத்த அந்த மனிதர் எனக்காக ஒரு உதவி மட்டும் செய், என் மகனிடம் நான் அவனை நேசிக்கிறேன் என்று சொல்லிவிடு என்றார்.
என்னால் அதைச் செய்ய முடியாது, நீங்கள்தான் உங்கள் மகனிடம் அதைச் சொல்ல வேண்டும், அதுவும் உங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு தினமும் நீங்கள் அப்படிச் சொல வேண்டும் என்றிருக்கிறார் Aeron.
அந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதர் அப்படியே நின்று விட்டார். டக்கென்று அவரைப் பிடித்துக் கொண்ட Aeron, அவரை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல இருவரும் அமர்ந்தார்கள்.

அந்த மனிதர் அழ, Aeron அழ, ரயில் பாதையைக் காட்டி “இனி நீங்கள் அங்கேசெல்லக்கூடாது, சரியா? இனிமேல் எல்லாம் நன்றாகத்தான் நடக்கும்” என்று கூற வாழ்வை முடிக்க வந்த மனிதர் புது வாழ்வைத் துவங்கும் முடிவுடன் புறப்பட்டார்.
ரயில்வே அதிகாரிகளும் பொலிசாரும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல எதுவும் நடக்காததுபோல் தனது வேலையைப் பார்க்கப் புறப்பட்டார் Aeron.
ஆனால் கனடா அரசு அவரை அப்படியே விட்டு விடவில்லை. Aeron போன்ற மனிதர்கள் உலகத்திற்கு தேவை என்று பாராட்டிய Metrolinxஇன் செய்தித் தொடர்பாளர் Anne Marie Aikins, அவரை ஹீரோ என்று வர்ணித்தார்.
Aeronக்கு பாதுகாப்பு விருதை அளித்து Metrolinx கௌரவித்துள்ளது.


http://www.tamilwin.com/security/01/182882?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment