Thursday, May 17, 2018

மீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது! பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்


மீண்டுமொரு இன அழிப்பு ஈழத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே இது தொடர்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வின்போது, பிரித்தானிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் முக்கிய உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து நிழல் நிதியமைச்சர் ஜோன் மக்டொனல், நிழல் பன்னாட்டு அபிவிருத்தி அமைச்சர் கேற் ஒசேமோர், சமாதான விவகார நிழல் அமைச்சர் பபியன் கமில்டன் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிபோன் மக்டொனா, ஜொன் ரையன், ஸ்ரீபன் ரிம்ஸ், ஸ்ரீவன் பவுண்ட், வெஸ்ற் ஸ்ரிறீற்ரிங், கரத் தொமஸ், ரான் டேசி ஆகியோரும் உரையாற்றினர்.
இவர்களின் அனைவரது உரையிலும் தமிழ் மக்களுக்கான வாழ்வுரிமை வலியுறுத்தப்பட்டதுடன், ஈழத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பினால் அதிகளவான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை போன்று மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.













http://www.tamilwin.com/community/01/182865?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment