Thursday, May 17, 2018

பிரபாகரன் இறந்துவிட்டார்?? ஆனால்!! முதலமைச்சர் சி.வியின் பரபரப்புச் செய்தி


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்ததன் பின்னர் தனது கொள்கையை கொண்டு செல்வதற்குரிய நபர்களை அதற்கேற்றாற்போல் வைத்திருந்தாரா என்பபதை தான் அறிந்திருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் தேசியத் தலைவராக அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரின் போது இறந்துவிட்டார் என்பதை தான் சர்வ சாதாரணமாகக் கூறினாலும் அதனை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
”அவர் (தலைவர் பிரபாகரன்) ஒரு சிறந்த போராளி என்பதை சரத் பொன்சேகா கூட கூறியிருக்கிறான்றார்.
தீவிர போராளி என்று சொல்வோமேயானால், ஒரு விடயத்தை அவர் தீவிரமாக பற்றிக்கொண்டார்.
அதாவது தனி நாடு மட்டும் தேவை வேறு எதுவுமே தேவை இல்லை என்று கூறியதனால், இலங்கையின் பல அரசாங்கங்கள் அதை வேறு விதமாக கருத்தில் எடுத்து எமக்கு எதிராக நடந்துகொண்டன.
ஆகவே அவரை மாவீரன் என்பதிலோ தீவிர போராளி என்பதிலோ எந்தவிதமான பிழையும் இல்லை. அவரை ஒரு சிறந்த போராளி என்று நான் மட்டுமில்லை சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். அதை நான் சொல்லியிருக்கிறேன்.
அரசியல் ரீதியாக அவரது இடம் எங்கு இருக்கின்றது என்றால், தனி நாடு மட்டும் தான் தேவை என்ற அந்த ஒரு விடயத்திலே அவர் மிகவும் பற்றுறுதியோடு இருந்தார். இதனால் வேறு எதனையும் செய்யக்கூடிய அல்லது வேறு எதனையும் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை எங்களுக்கு ஏற்படவில்லை.
அதனுடன், அவர் இறந்ததன் பின்னர் அதனைக் கொண்டு நடத்துவதற்கான ஆட்களை அவர் அதற்கேற்றமாதிரி வைத்திருந்தாரோ அது எனக்கு தெரியவில்லை. ஆனால் அதற்குப் பின்னர், பல வருடங்கள் கடந்ததன் பின்னர்தான் ஜனநாயக ரீதியாக நாங்கள் இதற்குள் நுழைந்தோம்.
அப்பொழுது எங்களுக்கு தரப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதைக் கூறியிருந்தார்களோ, அதாவது எங்கள் மக்கள், மக்கள் தலைவர்கள் இணைந்து எந்த தீர்மானத்தை எடுத்திருந்தார்களோ அதற்கமைவாகவே நாங்கள் இதுவரையில் செய்துவருகின்றோம்.
ஆகவே அதற்கும் முன்னர் குறிப்பிட்டதற்கும் வித்தியாசம் இருப்பதாகத்தான், அதை ஒரு விதமாக நான் முன்னர் விமர்சித்திருக்கிறேன்.” என்றார்.
நீங்கள் ஒரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்துள்ளீர்கள். இப்பொழுது பேசுகின்றபோது அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளீர்கள். இதனை உறுதிப்படுத்த முடியுமா? என கேட்கப்பட்டது.
”இறந்துவிட்டார் என நான் சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டேன். அது என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஏனென்றால் நெடுமாறன் இப்பொழுதும் கூறுகின்றார், அவர் உயிருடன் இருபதாக. பொதுவாக மக்கள் அவர் இறந்துவிட்டர் என்று கூறியதன் அடிப்படையில் அதைப்பற்றி நான் யோசிக்காமல் கூறிவிட்டேன்.
அவர் இருக்கின்றாரா இல்லையா என நீங்கள் கேட்டால் எனக்கு தெரியாது என்பதுதான் என்னுடைய பதில்.” என்று குறிப்பிட்டதுடன், ஒரு போராளி, மக்களுடைய இதயத்தை வென்றவர், உயிருடன் இருக்கின்றார் என்பதை சிறப்பாகக் கருதுவீர்களா? அவர் இறந்துவிட்டார் என்பதைச் சிறப்பாக கருதுவீர்களா? நீங்களே சொல்லுங்கள்.” என்றும் கேள்வியெழுப்பினார்.

http://www.jvpnews.com/srilanka/04/172979?ref=home-jvpnews

No comments:

Post a Comment