Thursday, May 31, 2018

நாடு திரும்பிய ரோஹிங்கியா அகதிகளுக்கு நேர்ந்த அவலம் !


பங்களாதேஷில் இருந்து 58 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் மியான்மர் திரும்பியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு திரும்பும் நடைமுறைகளை இந்த அகதிகள் பின்பற்றாத காரணத்தினால் இவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சன் சூகி அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில்,
“நாடு திரும்பிய அவர்களுக்கு மன்னிப்பளித்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் வரை அவர்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அவர்கள் தொடர்பான எந்த விபரங்களையும் மியான்மர் அரசு வெளியிடவில்லை. பங்களாதேஷின் அகதிகள் நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற ஆணையர் முகமது அபு கலாம்,
“ரோஹிங்கியா அகதிகள் முகாம்களிலிருந்து தங்களுடைய ஏற்பாட்டிலேயே வெளியேறிய சம்பவங்கள் குறித்து நாங்கள் எதுவும் கேள்விப்படவில்லை” எனக் கூறியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.
மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கியா நாடுகள் சபை “இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம்” எனக் குறிப்பிட்டது.
இதில் பாதிப்படைந்து கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷ், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

http://www.tamilwin.com/community/01/184167?ref=viewpage-manithan

No comments:

Post a Comment