Sunday, May 20, 2018

மெர்க்கலின் சுயசரிதையில் ரகசியத்தை மறைத்த பிரித்தானிய அரச குடும்பம்


பிரித்தானியாவின் இளவரசி மேகன் மெர்க்கலுக்கு என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் Duchess-sussex என்ற பெயரில் சுயசரிதை விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
https://www.royal.uk என்பது பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தளம் ஆகும். இதில், அரச குடும்பத்து உறுப்பினர்கள் பற்றிய சுயசரிதை அடங்கியிருக்கும்.
இந்நிலையில், புதிதாக திருமணம் செய்துகொண்ட மெர்க்கல் குறித்த விவரங்கள் அதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 15 வருடங்களாக ஹாலிவுட் நடிகையாக இருந்த மெர்க்கல், ஹரியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர்தான் நடிப்பு துறையில் இருந்து விலகினார்.
ஆனால், அரசகுடும்பத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இவர் ஒரு நடிகை என்பது மறைக்கப்பட்டுள்ளது. சுயசரிதையில், மெர்க்கல், சமூக விவகாரங்கள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருந்ததுடன், தொண்டு வேலைகளில் தீவிரமாக பங்கேற்றார்.
11 வயதிலேயே வெற்றிகரமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். அதல் சில நிகழ்ச்சிகள் மற்றும் அவற்றின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். 13-17 வயதில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸில் soup kitchen in Skid Row என்ற நிகழ்ச்சி மூலம் தன்னார்வ தொண்டு செய்து வந்தார். 22 வயது வரை தனது இந்த பணியையே மேற்கொண்டார்.
இந்த ஆரம்ப அனுபவங்கள் சமூக நீதி மற்றும் பெண்களின் அதிகாரமளித்தல் போன்ற காரணங்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் வடிவமைக்க உதவுகிறது.
2011 - 2013 ஆம் காலகட்டத்தில் டொரண்டோவில் Canadian soup kitchen நிகழ்ச்சியில் பங்குபெற்றார் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் இவர் ஈடுபட்ட தொண்டு பணிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இவர் ஒரு நடிகை என்பதை அரச குடும்பம் முற்றிலும் மறைத்துள்ளது.


http://news.lankasri.com/uk/03/179236?ref=ls_d_special

No comments:

Post a Comment