Tuesday, May 29, 2018

திருமணத்தில் படம் எடுக்கும் ஒளி ஓவியரின் வேண்டுகோள்??!

every one are #PHOTOGRAPHERS ☺️
வந்திருக்கும் எல்லோருக்கும் இது ஒரு உறவினர் நிகழ்ச்சி ஆனால் படப்பிடிப்பாளருக்கு அது தொழில் எனவே அவன் வேலையை குழப்பாதீர்கள்.

திருமணத்தில் படம் எடுக்கும் ஒளி ஓவியரின் வேண்டுகோள்.

அன்பு நண்பர்களே
தங்கள் நண்பர் அல்லது உறவினர் திருமணம் மற்றும் இதர சுபகாரியங்கள் என்றென்றும் திரும்பி பார்க்க உதவுவீர்கள் தானே,

01. உங்கள் மொபைலில் வேணும் அளவிற்கு படமெடுங்கள், அப்போது படமெடுப்பதற்காகவே காசு கொடுத்து வரவழைக்கப்பட்ட ஒளிப்படகலைஞருக்கு தொந்தரவில்லாமல்,

02. நீங்கள் படமெடுத்தாலும் எடுக்காவிட்டாலும் யாரும் கேட்கபோவதில்லை. ஆனால் அவர் ஆல்பம் செய்து கொடுத்தால் தான் உங்கள் நண்பர் மீண்டும் மீண்டும் தமது சந்தோச நிகழ்வுகளை காண முடியும்

03. கலைஞர் பதிலளிக்க வேண்டிய இடத்திலுள்ளார், சாரி என்று நீங்கள் சொன்னாலும் உங்கள் இடையூறால் தவறவிட்ட அந்த நொடி உணர்வை மீண்டும் எடுக்க முடியாது

04.ஹாலில் உள்ளவர்கள் நாங்கள் மறைப்பதாக குறைகூறுவர், ஆனால் நாங்கள் நல்ல கோணம் கிடைக்க குறுக்கம் நெடுக்குமாக போய்தான் ஆகவேண்டும், உண்மையில் நீங்கள் நின்று படம் எடுப்பது தான் பிரச்சனை, ஆனால் உங்களை சொல்லாமல் எங்களை குறைக்கூறுவர்

05.தங்களது ஈ மெயில் முகவரி தந்தால் நாங்களே தங்கள் படங்களை அனுப்புவோம், தங்கள் மொபைலில் எடுக்க சொல்வது எங்களுக்கு பெரிய சோதனை

06. கேக் வெட்டும் போதும் பேப்பர், நுரை இன்னும் பலவற்றை தெளித்து கேக்கையும் வீணாக்குகிறீர்கள்,
பல ஆயிரம் செலவு செய்து வந்த மணமக்கள் மேக்கப் வீணாகிறது, அதை துடைக்க போய் நேரம் வீணாகிறது
எங்களது கேமிராவில் பட்டால் பல லட்சம் வீணாகும் எனவே பயந்தே அதை படமெடுக்கிறோம், இது தேவையா?

07. நீங்கள் யாருடன் படமெடுத்து கொள்ள விரும்புகிறீர்களே அவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு மேடை ஏறுங்கள், அங்கு வந்த பின் ஒவ்வொருவராக அழைத்து நேரத்தை வீணாக்காதீர்கள்,

08. நல்ல கலைஞன் / வியாபாரி என்றுமே சமுக விரோத செயல் செய்யமாட்டான், தயவுசெய்து உங்கள் உடைகளை சரி செய்த பின்பே மேடை ஏறுங்கள், பிறகு தவறாக எடுத்தான் என குறைகூறாதீர்கள்

09.இப்பொதுதெல்லாம் வடஇந்தியர்போல் முந்தானையை மாற்றி கட்டுவது பழக்கமாகிவிட்டது, நீங்கள் சடங்குகள் செய்யும் போது வலதுபுறமும் இடதுபுறமும் நாங்கள் மாறக்காரணம் தங்கள் முந்தானி ஸ்டைல் மாறி மாறி வருவதாலேயே, கொஞ்சம் ஒத்துழையுங்கள், எல்லார் வீட்டிலும் பெண்கள் உளர்,

10.சிலரை நகர்ந்து நிற்க சொல்வது அவர் அந்த குடும்ப குருப் படத்திற்கு அவசியமில்லை என்பதற்கே
அடுத்த படத்தில் எடுக்க தான் வந்திருக்கிறோம் நகர சொன்னதால் அதை தவறாக நினைக்கவேண்டாம்

11. முன்பு போல் நெகட்டிவ் செலவில்லை என தேவையில்லா படத்தையோ அல்லது எடுத்ததையே 2 ,3 முறை எடுக்க சொல்லாதீர்கள்,, முன்பை விட இப்பொழுது தான் நாங்கள் அதிகம் செலவு செய்கிறோம் , என்னவென்று அறிய விரும்பினால் இன்பாக்ஸ் வாங்க

12. என்ன கேமிரா என்ன லென்ஸ் என நிகழச்சியன்று வந்து கேள்வி கேட்காதீர்கள், உண்மையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் முகூர்த்தம் இல்லா நாட்களில் முன்னறிப்போடு சென்று கேட்டு கொள்ளுங்கள். கூகுளில் நீங்கள் பார்த்த விசயங்களுக்கு பதில் தர இது நேரமில்லை, மேலும் ஒரு நல்ல பேனா உன்னதமான கட்டுரை தாராது என்பதும் அதிக விலையுள்ள உளி நல்ல சிற்பங்களை தாராது என்பதும் போல் நீங்கள் எங்கோ பார்த்த கேமிரா நல்ல படத்தை தராது, கலைஞனே இங்கு படைப்பாளி ,. கருவிகள் அவனுக்கு வேலையை எளிதாக்கும் அவ்வளவே,

13. என்ன பட்ஜெட் பேசி இருக்கிறார்களோ அதற்கு தகுந்த படிதான் படமெடுப்போம் இது தெரியாமல் நீங்கள் செய்யும் விசயங்கள் சரியா,
14. கேட்டரிங் காரர்களே,,நாங்கள் வித விதமாக சாப்பிடவரவில்லை, ஏதோ விடியற்காலையிலிருந்து தொடர்ந்து வேலை இருப்பதால் பசிக்கு சாப்பிட வருகிறோம், பல வேலை எங்கள் கேமிரா பேகில் இருக்கும் பிஸ்கட் தான் எங்கள் உணவு, நாங்கள், மேளக்காரர்கள் ஆடியோ காரர்கள் என நிகழ்ச்சிக்கு பணிசெய்ய வருபவர்களுக்கு தனியாக இடம் தாருங்கள், ஒரே உணவே என்றாலும் உடன் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு செல்லவேண்டும், வரிசையில் உட்காருவதால் எங்களுக்கு லேட்டாகிறது,

யாரும் வருவதற்கு முன்பே இன்னும் சொல்லபோனால் மணமக்கள் வீட்டார் எழும் முன்னரே மண்டபம் வந்து எல்லாரும் வந்து சென்ற பின்பு செல்லும் நா்ங்கள் உங்கள் ஆல்பம் நன்றாக வரவேண்டும் என்றே மேற்கண்ட பதிவிட்டேன் ஒத்துழையுங்கள் உன்னத படங்களை பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

✍🏻நன்றிகள்

https://www.facebook.com/photo.php?fbid=10160188926640018&set=a.10150555323195018.639398.597875017&type=3&theater



என் கருத்து:உறவுகள் நண்பர்களை அழைப்பது விழாவை கொண்டாட!படம் எடுப்பதே முக்கியம் என நினைப்போர் அவர்களை அழைக்காமல் படமெடுத்து அல்பம் போட்டபின் party ஏற்பாடு செய்து அங்கு அழைத்து அல்பத்தை காட்டலாமே!உறவுகள், நண்பர்கள் தொலை தூரங்களில் இருந்து வருவது பெரும் செலவில்,அது படமெடுக்க கொடுக்கும் பணத்தை விட அதிகம்!அவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாத கொண்டாட்டங்களில் அவர்கள் எதற்கு??

No comments:

Post a Comment