Saturday, May 19, 2018

அரசியலில் இருந்து ஓய்வு! மஹிந்தவிடம் மீண்டும் நாடு ஒப்படைப்பு!! மைத்திரியின் முடிவு என்ன?


சமகால அரசியல் பல்வேறுபட்ட குழப்பநிலைகளை அடைந்துள்ள காரணத்தினால் நாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க தான் தயாராக உள்ளதாக மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே மைத்திரி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலின் போது, அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடியாத நிலைப்பாட்டில் இருந்தால் கட்சியை மஹிந்தவிடம் ஒப்படைத்துவிடுமாறு மைத்திரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு, நாட்டை கட்டியெழுப்ப மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தால் கட்சியை அவரிடம் ஒப்படைத்து விட தான் தயாராக இருப்பதாக மைத்திரி பதில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தற்போதைய சூழலில் அரசியல் தொடர்பாக சரியான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் அரசியலில் தொடர்வதும் குறித்தும், ஓய்வு குறித்தும் தீர்மானிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி எதிர்வரும் 3ஆம் திகதி வரையிலும் தீர்மானமிக்க முடிவு ஒன்றினை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட சுதந்திரக்கட்சியின் குழு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/04/173175

No comments:

Post a Comment