Tuesday, May 8, 2018

இந்த மாதம் பணமழையில் நனைய போகும் ராசிகள்


இந்த மே மாதத்துல குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு வருமானம் அதிகரிக்க போகுது, தொழில்ல, வேலைகள்ல முன்னேற்றம் ஏற்பட போகுது.
அவை எந்தெந்த ராசின்னு பார்க்கலாமா!!!
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் இந்த மாதம் உச்சமடைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமாக பணவரவு கொட்டும். மேஷத்திற்கான தனாதிபதி சுக்கிரனும் பலமாக இருப்பது மேலும் சிறப்பான விஷயமாகும்.

ரிஷபம்
ரிஷபத்துக்கான அதிபதி சுக்கிரன் இவர் உச்சமடைவதால் பணவரவு அதிகரிக்கும், புதன் பதினோராவது இடத்தில இருப்பதால் நீச்சபங்க ராஜயோக முறைப்படி ரிஷபராசிக்கு நிச்சயம் பணம் கொட்ட போகிற மாதம் இந்த மே மாதம்தான். சுப விரயம் ஏற்படும்.

கடகம்
கடகத்துக்கான அதிபதி சூரியன். இந்த மே மாதம்தான் இவரும் உச்சம் பெறுகிறார். 15 நாட்கள் உச்சத்தில் இருப்பார். அதன் பின் அடுத்த இடத்திற்கு நகர்ந்து விடுவார். கடகத்திற்கு யோக கிரகமான செவ்வாய் உச்சம் பெறுவதால் இவர்களுக்கு உறுதியான தனவரவு உண்டு.

துலாம்
துலாம் ராசிக்கான தனாதிபதி செவ்வாய் மற்றும் லாபதிபதி சூரியன் உச்சம் பெற்று இருக்க கூடிய மாதம் மே மாதம். அதுபற்றி சூரியனின் நேர்பார்வையிலும் இந்த ராசி இந்த மாதம் வருகிறது. ஆகவே இந்த மாதம் இவர்களுக்கு பண மழை பெய்யக் கூடிய மாதமாக இருக்கிறது.

தனுசு
தனுசிற்கு அதிபதி சனி. யோகாதிபதி செவ்வாய். செவ்வாய் உச்சம் பெற்று ஜென்ம ராசியில் வருவதால் பண வருவாய் அதிகமாக இருக்கும். இருப்பினும் சிறிது மனபதட்டம் விரக்தி ஆகியவை இருந்தாலும் வருமானம் வரும்.

மீனம்
மீனம் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இந்த மாதத்தில் வருகிறது, செவ்வாயின் உதவியால் லாபம் சேமிப்பு பணவரவு ஆகியவை அதிகரிக்கும்.


http://www.viduppu.com/astrology/03/178173?ref=ls_d_gossip

No comments:

Post a Comment