Wednesday, May 23, 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பின் இருக்கும் அரசியல்- வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனை


தூத்துக்குடியில் அப்பாவி மக்களுக்கு போலீஸ் அதிகாரிகள் செய்த செயல் பலரையும் சோகமடைய வைத்துள்ளது.
எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தங்களது உரிமைக்காக போராட்டம் செய்த மக்களை சுட்டுக் கொன்றது யாராலும் மன்னிக்க முடியாத ஒரு சம்பவம். 10 பேர் இறந்துவிட்டார்கள், இதற்கு முடிவு என்ன என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் போலீஸ் சுட்டுக் கொன்றது திட்டமிட்ட கொலை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
எந்த போராட்டம் நடத்தினாலும் போலீசாருக்கு முதலில் சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டிருக்க வேண்டும். இதில் எதையாவது பின்பற்றியிருக்கிறார்களா?
எடுத்த எடுப்பிலேயே நெஞ்சில் குறி வைத்து சுடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த 8 பேர், இந்த போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி வந்தவர்கள். ஆகையால் இது திட்டமிட்ட கொலை. போராட்டத்தின்போது தற்செயலாகநடந்தது இல்லை. இன்று அவர்கள், நாளை நாம்தான். இதை யாருமே கேட்கவில்லையென்றால் நாம் நல்லாயிருப்போமா என்றால் கண்டிப்பாக கிடையாது…! நமது வளங்களை சுரண்டிவிட்டார்கள்… நீரை சுரண்டிவிட்டார்கள்… நம் மண்வளம் உள்பட எதுவும் நம்மிடம் இல்லை.
இதை அவர் காவல்த்துறையினர் உடையில் கூறியது பெரும் பிரச்சனையாகியுள்ளது. சென்னையில் இவர் மீது 4 பிரிவுகளில் புகார் கொடுத்துள்ளனர், இதை தொடர்ந்து இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


http://www.cineulagam.com/actresses/06/154820?ref=ls_d_cinema

No comments:

Post a Comment