Thursday, May 10, 2018

நான் சாகப் போகிறேன் என்னை காப்பாற்றுங்கள்: பிரான்சில் உயிருக்கு போராடிய பெண் இறந்த சம்பவம் !


பிரான்சில் வயிற்று வலியால் துடித்த இளம் பெண் அவசர சேவைக்கு உதவிக்காக போன் செய்த போது அந்த நபரின் அஜாக்கிரதையால் அவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரான்சின் Strasbourg பகுதியைச் சேர்ந்த Naomi Musenga(22) என்ற இளம் பெண்ணிற்கு கடந்த டிசம்பர் மாதம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பெண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டு என்பதற்காக அவசர சேவைக்கு போன் செய்துள்ளார். அப்போது அந்த போனை எடுத்து பேசிய நபரிடம் எனக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

நான் சாகப் போகிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த நபரோ ஆம் எல்லாரும் ஒரு நாள் சாகத் தான் போகிறோம், நீங்கள் பேசுவது ஒன்று தெளிவாக கேட்கவில்லை, தெளிவாக சொல்லுங்கள் இல்லையெனில் போனை கட் செய்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
மிண்டும் அந்த பெண் வயிற்று வலி பற்றி கூறிய போது, நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது மருத்துவருக்கு போன் செய்யுங்கள் என்று கூறி போன் நம்பர் கொடுத்துள்ளார்.
மிகவும் வலியால் அந்த பெண் மீண்டும் பேசிய போது, அஜாக்கிரதையாக அங்கிருந்த சக ஊழியரிடம் பேசி சிரிந்துள்ளார். அதன் பின் அந்த பெண் அந்த நபர் கொடுத்த நம்பருக்கு போன் செய்த போது, வந்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், மூளைக்கு சென்ற இரத்தம் தடைபட்டதாலும், உடலில் பாகங்களில் செயல்பாடு முற்றிலும் ஒன்று ஒன்றாக நின்றதன் காரணமாகவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த போன் கால் அந்த பெண்ணின் போனில் பதிவாகியிருந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் போனை பார்த்த போது அதில் இந்த பெண், அவசர சேவைக்காக அந்த நபரிடம் பேசியது தொடர்பான ஆடியோ இருந்துள்ளது.
அந்த நபர் மட்டும் உரிய நேரத்தில் சரியான விளக்கம் கொடுத்திருந்தால், அவர் பிழைத்திருக்க வாய்பிருந்திருக்கும். சுமார் 5 மணி நேரம் உயிருக்கு போராடியே பின்பே பெண்ணின் உயிர் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து பிரான்ஸ் அரசு சார்பில் தெரிவிக்கையில், குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபடுவார்கள், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/france/03/178425?ref=ls_d_france

No comments:

Post a Comment