Monday, May 21, 2018

பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இரையான இலங்கை தமிழர்: துடித்துப் போன நண்பர்கள்

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா வந்துள்ள குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உத்தம வில்லன் என அறியப்படும் குறித்த இளைஞர் மிகவும் பணிவானவர் மற்றும் அன்பானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் 44 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய தலைநகரை பொறுத்தமட்டில் இந்த ஆண்டில் மட்டும் இது 65-வது கொலை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட இளைஞர் உத்தம வில்லன் Mitcham பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் என கூறப்படுகிறது.
அவருக்கு பிரித்தானியாவில் குடும்பம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. அவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

உத்தம வில்லனின் நண்பர்களே பொலிசாருக்கு அவர் தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
உதவி என யார் வந்து கேட்டாலும் தட்டாமல் செய்யும் இரக்க குணம் கொண்டவர் உத்தம வில்லன் என அவரது நண்பர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
2 தினங்களுக்கு முன்னர் உத்தம வில்லன் மீது மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.






http://news.lankasri.com/uk/03/179246?ref=ls_d_uk

No comments:

Post a Comment