Tuesday, May 29, 2018

முடி கொட்டுவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும்.
முடி கொட்டுவதற்கான காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.
  • இரும்புச்சத்து மற்றும் கரோட்டின் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும்.
  • குழந்தை பிறப்புக்கு பிறகு பெண்களுக்கு முடி கொட்டுதல் அதிகரிக்கும். ஏனெனில், குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்தியதும், அவர்கள் தங்களது ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்காததே ஆகும்.
  • பள்ளி மாணவர்கள் படிப்புச் சுமை காரணமாக தங்களது தேக ஆரோக்கியத்தை பராமரிக்க தவறுகின்றனர். மேலும், சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளாததால் இளம் வயதில் அவர்களுக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது.
  • சிலர் நோய் எதிர்ப்பிற்காக அதிகளவில் மருந்துகளை எடுத்துகொள்வர். அவர்களுக்கும் முடி அதிகமாக கொட்டும்.
  • இவற்றைத் தவிர, வயதின் முதிர்ச்சி காரணமாகவும் முடி தானாக கொட்டும்.
  • முடி கொட்டுதல் ஏற்படும்போது, முடிக்கு தேவையான சத்து நிறைந்த உணவுகளை தெரிவு செய்து உட்கொள்ளவதே இதற்கு தீர்வாகும்.


http://news.lankasri.com/health/03/179891?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment