Thursday, May 17, 2018

நடந்துமுடிந்த இன அழிப்பும்!!! அழிந்துபோகும் தடயங்களும்!


முள்ளிவாய்க்கால்முள்ளிவாய்க்கால் என்று முத்தியடித்து போட்டி போட்டு பேரம்பேசிக்கொண்டிருக்கின்றோம் இதனால்ஏற்படப்போகும் பயன்? என்ன இலாபம் என்ன? சாதரணமான ஒரு அஞ்சலி நிகள்வுக்கு ஏன்இத்தனை போட்டிகள் இதுவரைகாலமும் அரசியல் வாதிகளின் தலைமையில் அல்லது அவர்களதுதலையீட்டின் கீழே ஒரு சில நிகள்வுகள் நடைபெற்றன.
அவ்வாறான நிகழ்வுகளினூடாக தம்மை புரட்சியாளர்களாகவும் உத்தமர்களாகவும் நல்ல மீட்ப்பர்களாகவும் அடையாளப்படுத்திக்கொண்ட அரசியல்வாதிகள் இன்றும் தாமே முன்னிலையில் நிற்க்கவேண்டும் என்ற பேராவாலோடு பலதரப்பட்ட வகையிலே மிகவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவைவெற்றியளிக்கவில்லை மாறாக மக்களிடமும் ஒருசில நடுநிலைவாதிகளிடமும்விமர்சனங்களையும் பலமானஎதிர்ப்புக்களையுமே சம்பாதித்துக்கொண்டனர்.
முள்ளிவாய்க்கால்நினைவுநாளுக்கு கதாநாயகர் யார் என்ற போட்டியுடன் முட்டிமோதிக்கொண்டவர்கள்முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும்வவுனியாவிலும் ஒருவருடகாலத்துக்கு மேலாக கானாமல்போன உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்குவலுச்சேர்க்கமுடியாமல் போன காரணம் என்ன? யாரை திருப்த்திப்படுத்த இந்த விடையத்திலேஅனைவரும் தொலைதூர வேடிக்கையாளர்களாய் வேடிக்கைபார்க்கின்றனர்!
இதுவரைகாலமும்சாதாரண மக்களால் தமது உறவுகளுக்காக அஞ்சலிக்கவும் அவர்களது உணர்வுகளைவெளிப்படுத்தவும் முடியாத ஒரு சுழ்நிலையிலேயே மேற்குறிப்பிட்டவாறு அரசியல்வாதிகளும் ஓரளவுஅதிகாரம் மிக்கவர்களாலும் குறிந்த நிகள்வுகளை முன்னெடுக்க முடிந்தது ஆனால் இன்றயகால மாற்றத்தினால் இங்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் என்பவறினால் தமது அஞ்சலிநிகள்வுகளுக்கான தடைகள் தகர்ந்துபோயுள்ளன எனவே இனி அதனை நூற்றுக்கு நூறு வீதம்
உரிமையுள்ளமக்களே முன்னெடுப்பார்கள் இனி அரசியல் தலையீடுகள் அவசியம் இல்லாத ஒன்று இதனைகருத்தில் கொண்டே இனிவரும் காலங்களில் செயற்படவேண்டும் எமது அரசியல்வாதிகள்.
முள்ளிவாய்க்கால்பேரவலம் அந்த மானிடப்படுகொலை நடைபெற்று ஒன்பது ஆண்டுகளை கடந்துவிட்டோம் மாறி மாறி பல தேர்தல்களில் வெற்றிகண்டுள்ளோம் பலதலைவர்களை சந்தித்திருக்கின்றோம் எத்தனையோ தீர்மானங்களை நிறைவேற்றுயிருக்கின்றோம்ஆனால் இன்றுவரைக்கும் நாம் கண்ட நன்மை என்ன? இங்கே ஏற்பட்ட மாற்றம் என்ன? ஏமாற்றம்என்ற ஒன்றைத்தவிர எமது தலைமைகளினால் எமக்கு கொடுக்கப்பட்ட பரிசு தான் என்ன? இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலையின்குற்றவாளிகளுக்கு இன்னமும் தண்டனை கிடைக்கவில்லை என்றாலும் பறாவாயில்லை இனப்படுகொலை நடைபெற்று ஒன்பது ஆண்டுகள்கடந்தபோதும் குற்றவாளிகள் இன்னமும் அடையாளம் கானப்படவில்லை என்பது தான் வேதனையானவிடையம்
இலங்கைதமிழர்களின் பிரச்சினை வெறுமனே தமிழர்களது பிரச்சினையாக மட்டும்நோக்கப்படுவதாலேயே! இத்தனை பிச்சினைகள் சிக்கல்கள் ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் பிரச்சினையாகஅதுநோக்கப்படுமாக இருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டிருக்காது பயங்கரவாதம் என்ற கோணத்திலேயே நோக்கப்பட்ட தமிழர்களதுபோராட்டமானது ஒரு போராட்டமாகவோ அல்லது இரண்டு இனங்களுக்கான பிரச்சினையாகவோசர்வதேசமட்டத்தில் நோக்கப்பட்டிருந்தாலேனும் இத்தனை அழிவுகளில் இருந்து தமிழினம்தப்பித்திருக்குமோ என்ற ஆதங்கம் சில வேளைகளிலே நெஞ்சங்களில் எழுகின்றன
ஒரே நாடுஒரே தேசம் என்று கூறிக்கொண்டு ஆட்சியாளர்களின் அடிக்கழுவிவிடக்கூட வெட்கப்படாத தலைமைகள் உள்ளவரைக்கும் இந்த இனத்துக்கு மட்டும் அல்லமுழு இலங்கைத்தீவுக்கும் விடிவு என்பதில்லை
வெறுமனேவார்த்தை ஜாலங்களாலும் அற்பசலுகைகளாலும் தொடர்ந்தும் ஏமாற்றி ஆட்சியமைக்கும் சிங்கள மேலாதிக்கவாதிகள்தமிழர்களை இந்த நாட்டிலே அகதிகளாகக்கூட ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் கூட இல்லை
ஆனால்எங்கள் தலைமைகளோ இணக்க அரசியல் என்றும் நல்லிணக்கப்பாடு என்று ஒருஇனப்படுகொலைக்கான குற்றம் சுமத்தப்பட்டுள்ள அசாங்கத்துடன் ஒட்டிஉறவாடிக்கொண்டிருக்கின்றனர்
அனுபவசாலிகள்என்றும் வயதில் மூத்தவாற்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கும் எமது அரசியல்தலைமைகளின் அரசியல் சாணக்கியம் என்பது சிங்களதேசத்தின் சிறுபிள்ளை விளையாட்டுக்களோடும் ஒப்பிடுப்பார்க்க முடியாத அளவுஅவர்களோடு ஒப்பிடும்போதுஅவர்கள் பொழுதுபோக்காக செய்கிற செயற்பாடுகள் கூட இவர்களால் முழு மூச்சாகசெய்யமுடியவில்லை ஆரம்பத்தில்13 என்றார்கள் இனவழிப்பு முடியும் வரை அதாவது மே18 வரைக்கும் 13+ என்றார்கள் ஆனால்இப்போது 13 பற்றி பேச்சுக்களே இல்லாது மறைந்துபோய்விட்டது
முள்ளிவாய்க்கால்பேரவலம் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ளது!! இந்த ஒன்பது ஆண்டுகளுக்குள்எத்தனை பாரிய மாற்றங்களை சிங்களதேசம் தொலைதூரத்தில் இருந்தவாறே இயக்கிக்கொண்டிருக்கின்றது தன் இனத்தின் கண்ணீரை துடைக்கவேண்டிய கரங்களைக்கொண்டே அவர்களின்கண்களை குற்றி காயப்படுத்துபடி திட்டமிடல்களை உருவாக்கியுள்ளது சாவு வீடுகளில்க்கூட சண்டைபோட்டுக்கொள்ளும்குரோதங்களையும் ஒருஅஞ்சலி நிகள்வுகளைக்கூட ஒற்றுமையாக செய்யமுடியாத அளவு குரோதங்களையும் உருவாகியபெருமை சிங்கள ஆட்சியாளர்களோடு தமிழ்த்தலைமையளையுமே சாரும்
ஒற்றைவார்த்தைகளால் சிங்களதேசத்தினால் மூடி மறைக்கப்பட்ட விடையங்கள் திட்டமிடல்கள்உன்மையிலே பாரட்டப்படவேண்டிய ஒன்றுதான் மனிதாபிமானமே இல்லாத ஒரு மாபெரும் இன அழிப்பை மனிதாபிமான மீட்ப்புப்போர் என்றுபரப்புரை செய்து எண்ணிலடங்காத்தமிழர்களை கொண்றொழித்தது!! பயங்கரவாத ஒழிப்புப்போர்என்ற தலைப்பின் கீழே சர்வதேசம் எங்கிலும் அதிநவீனகொடிய வகை ஆயுதங்களை நச்சுக்குண்டுகளை பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தினையும்மடிப்பிச்சை எடுத்ததைப்போல அலைந்து திரிந்து பெற்றுக்கொண்டு அவர்களின் ஆதரவோடும் ஆதீத பலத்தோடுமே இந்தஇனவிடுதலைப்போராட்டத்தினை முள்ளிவாய்க்கால்மண்ணிலே சிங்கள தேசத்தினால் மௌனிக்கச்செய்ய முடிந்தது கொலை கொள்ளை கற்பழிப்பு என்றமனிதகுகத்துக்கெதிரான குற்றங்களைச்செய்த குற்றவாழிகளே
இன்று தமிழர்களுகான நீதியைபெற்றுத்தருவதாக கூறி சர்வதேசத்தில் கால அவகாங்களை பெற்றுக்கொண்டு அழிப்பின்அடையாளங்கள் சாட்சியங்கள் என அனைத்தையுமே அழித்தொழித்து குற்றவியல் விசாரணைகளைவலுவற்றதாக்கும் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கைத்தீவுக்குள்ளேஇடம்பெற்ற பிரச்சினைகள் வன்முறைகள்அனைத்துமே இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் என்பதை வெளி உலகத்தின்பார்வையிலே பட்டுவிடாதபடியிலான பரப்புரைகளையும் காய் நகர்த்தல்களையும் வெற்றிகரமாகமேற்கொண்டு இலங்கைத்தீவை தனிச்சிங்களத்தீவாக மாற்றுகின்றதமது கனவுக்கு முள்ளிவாய்காலிலே அடித்தளமிட்டு இன்று வரைக்கும் அதை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கின்றது ஆனால்எமது தலைமகளோ மறப்போம் மன்னிப்போம் பேசிக்கொண்டும் அடுத்த தலைமை யார் என்று அடிபட்டுக்கொண்டுமே ஒன்பதுஆண்டுகளைக்கழித்துவிட்டனர்
இதில் வெட்கித்தலைகுனியவேண்டிய விடையம் என்னவென்றால் உலகத்தமிழினமும் பல மனிதநேய அமைப்புக்களும்இலங்கையில் நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்று கூறிக்கொண்டிருக்கையிலே ஈழத்தில்தமிழர்களது பிரதிநிதிகள் என்று தமிழர்களால் தேர்வுசெய்யப்பட்டவர்களோ இன அழிப்பு என்றவார்த்தையினை உச்சரிக்கவே தயங்கி நிற்கின்றனர் பாதிக்கப்பட்ட சமூகத்தின்பிரதிநிதிகளாலேயே இது ஒரு இன அழிப்பு என்ற விடையத்தை ஏற்றுக்கொள்ள ஒன்பது ஆண்டுகள்ஆகியுன் முடியவில்லை என்றால் ஐநா சபை இதை ஏற்றுக்கொள்ள எத்தனை நூற்றாண்டுகள்தேவைப்படபோகின்றது அதுவரைக்கும் இந்த இனத்தின் இருப்பினை தக்கவைக்க முடியுமா??
இலகுவாகதீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளைக்கூட எத்தனையோ கூட்டங்கள் ஆலோசனைகள் என்றுகாலத்தை கடத்துவதோடு எங்கிருந்தோ எவர்எவரெல்லாமோ இவர்களை இயக்கும்பக்கம் எல்லாம் இவர்கள் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள் முட்டி மோதி போராடவேண்டிய எதிராளிகளின்பாதங்களை வருடிவிட்டு பரிசில்கள் பெற்றுக்கொள்ள இவர்களிடையே போட்டி
எதுவுமேவேண்டாம் எமக்கு சமஸ்டி வேண்டாம் தண்னாட்சி சுயாட்சி என்ற வார்த்தை ஜாலங்கள்எவையுமே வேண்டாம்
நடைபெற்றஇனவழிப்புக்கு சர்வதேச விசாரணை என்ற ஒன்று மட்டுமே வேண்டும் என்ற நிலைப்பாட்டில்உறுதியாக ஒற்றுமையாக நின்றிருந்தால் ஐநா அதிகாரிகள் இங்கே வந்திருக்கக்கூடும்அவ்வாறு வரும் பட்சத்தில் இங்கே நடைபெற்ற இனவழிப்பு ஆதாரபூர்வமான உன்மையோடு நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் இனம்கானப்பட்டிருப்பார்கள் இங்கே நடைபெற்றது இனவழிப்பு என்பது நிரூபனமாகும்போதே எமதுஉருமைகள் கோரிக்கைகள் அனைத்துமே தாமாகவே எமக்குக்கிடைத்திருக்குமல்லவா!!
மூத்தஅரசியல்வாதிகளே அனுபவத்தில் சிறந்தவர்களே ஏன் இவற்றையெல்லாம் சிந்திக்கமறுக்கின்றீர்கள்
வலிகள்சுமந்த இந்த மே மாதத்திலாவது கொஞ்சம் உங்கள் மனக்கதவுகளைத்திறந்து சிந்திப்பீர்களாஇனியேனும் கொஞ்சம் உங்களை தேர்வுசெய்த மக்களுக்கும் உங்களை ஈன்ற இந்த மண்ணுக்கும்சேவைசெய்வீர்களா!!
உங்கள்அரசியல் சாணக்கியம் வெறுமனே பேச்சளவில் மட்டும் தானா மறுபடியொருமுறைபிறந்தவர்களாய் உன்மைக்காய் குரல்கொடுங்கள் உங்கள் உள்ளத்தை சலவைசெய்து மண்விடுதலைக்காய் மறுபிறவி எடுங்கள்
யாழ்தீபன்
http://www.ibctamil.com/srilanka/80/100650?ref=ls_d_ibc

No comments:

Post a Comment