Saturday, May 12, 2018

பிரித்தானியாவில் அதிகம் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த நாட்டினர் தெரியுமா?


பிரித்தானியாவில் சமீப காலமாக அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்கு, குறிப்பிட்ட நாட்டவர்களின் பங்களிப்பு அதிகம் என அதிர வைக்கும் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகமை சமீபத்தில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் நாட்டில் இயங்கும் குற்றவியல் குழுக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.
குறித்த பட்டியலில் அல்பேனியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இதன் அடுத்த இடத்தில் பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களே ஆப்கான் வழியாக பிரித்தானியாவுக்குள் போதை மருந்து மொத்த விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவியல் குழுக்கள் குறித்த பட்டியலானது அபாயத்தை எதிர்கொள்ளவும், விசாரணை அதிகாரிகளுக்கு உதவும் வகையில் அமையும் என்பதாலையே வெளியிடப்பட்டுள்ளது என தேசிய குற்றவியல் முகமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றவியல் குழுக்கள் பட்டியலில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற 141 சோமாலிய நாட்டவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டுமின்றி, 131 இந்திய வம்சாவளி பிரித்தானியர்கள், போலந்து நாட்டவர்கள் 78 பேர், இலங்கை வம்சாவளி பிரித்தானியர்கள் 47 பேர், நைஜீரிய நாட்டவர்கள் 44 பேர் என தற்போதும் இயங்கி வரும் குழுக்கள் இவர்கள் என கூறப்படுகிறது.

மிகவும் கொடூரமான குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், போதை மருந்து கடத்தல் கும்பல் மற்றும் ஆட்கடத்தல் கும்பல் என கண்டறியப்பட்டுள்ள 2,083 பிரித்தானியர்கள் அனைவரும் வெளிநாட்டில் பிறந்து பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.
தேசிய குற்றவியல் முகமையின் தகவலின் அடிப்படையில் பிரித்தானியாவில் உள்ள 4,629 குற்றவியல் குழுக்களில் இயங்கிவரும் 33,598 குற்றவாளிகளில் 80 விழுக்காட்டினரும் பிரித்தானிய குடிமக்கள் எனவும், ஆனால் அதில் 73 விழுக்காட்டினர் பிரித்தானியாவில் பிறந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் கொசோவ நாட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ள 77 குற்றவாளிகளும் அகதிகளாக பிரித்தானியாவில் குடியேறியவர்களாகும்.
இவர்கள் அனைவரும் குடியுரிமை பெற்று பிரித்தானியர்களாகவே வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/uk/03/178563?ref=ls_d_uk

No comments:

Post a Comment