Thursday, May 31, 2018

காவலரை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டிய ரஜினி - கைது செய்த காவல்துறை

ஐபிஎல் பேராட்டத்தின் போது சீருடையில் இருந்த காவலரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி போரட்டத்தை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் போட்டி நடைபெறுவதாக சென்னை சேப்பாக்கத்தில் கடந்த மாதம் 10ம் தேதி போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் கிரிக்கெட் ரசிகர்கள் மீதும், காவலர்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோவில் தாக்குதலில் ஈடுபடுவது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசியது என வழக்குகள் பதியப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் பேராட்டத்தின் போது சீருடையில் இருந்த காவலரை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.manithan.com/india/04/174503?ref=ls_d_manithan

No comments:

Post a Comment