Wednesday, May 9, 2018

தமிழ் இளைஞனுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல்! காணொளி வெளியானது !


இலங்கை போக்குவரத்து பொலிஸாருக்கும் தமிழ் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழ் தெரியாத பலரின் பணம் பறிக்கும் நோக்கில் போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பொலிஸார் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அனுராதபுரத்தில் சென்று கொண்டிருந்த தமிழ் இளைஞனிடம் பொலிஸார் பணம் பறிக்கும் போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞர் இது தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டு சம்பவத்தை விபரித்துள்ளார்.
“நள்ளிரவு 12 மணியளவில் அநுராதபுரத்தில் நானும் எனது நண்பர்களும் வெசாக் பார்த்துவிட்டு வீதி ஒழுங்குகளுக்கேற்ப வந்துகொண்டிருந்தோம். ஈரட்டை வீதி போக்குவரத்து பிரிவை சேர்ந்த 2 அதிகரிகள் வீதியின் இடது பக்கத்தில் சென்றுகொண்டிருந்த எங்களை வலது_பக்கத்தில் இருந்து நடுவில் வந்து எங்களை இடை மறித்தனர்.
உரிய ஆவணங்களை காட்டுமாறு கூறினார்கள். நாங்களும் காண்பித்தோம் அதன் பிறகு எடுத்து 7 நாட்களே ஆனமோட்டார் சைக்கிளுக்கு வாகன இலக்க தகடு கேட்டனர். அதற்கு நான் தற்காலிக வாகன இலக்கம் மட்டுமே உள்ளது. அதன் அடிப்படையிலேயே நான் எனது வகனத்திற்கு உரிய ஆவனங்களை பெற்றேன், எனவே இது அரசாங்கத்தின் உத்தரவின் பெயரிலேயே செலுத்துகிறேன் என கூறினேன்.
இருந்த போதும் அதை அவர்களிடம் போய் கூறுங்கள் என பொறுப்பற்ற விதத்தில் கதைத்து எனக்கு தண்டப்பணம் விதித்துள்ளனர். அதற்து சம்மதித்த நான் எனது தண்டப்பண ரசீதில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி கேட்டேன்.
அதற்கு அவர்கள் சிங்களம் எமது நாட்டின் தேசிய மொழி எனவும் ஆங்கிலம் தெரியது எனவும் கூறினர்.


எனக்கு புரியாத மொழியில் இருப்பதால் உங்களது தண்டப்பண ரசீதை என்னால் வாங்க முடியாது எனவே எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள் என கூறிய போதும் அதை பொருட்படுத்தாது தண்டப்பண ரசீதை எனது மோட்டார் சைக்கிளின் மேல் வைத்து விட்டு சென்றுவிட்டனர்.
அரச அதிகரிகள் அனைவரக்கும் தமிழ் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்று அரசாங்கத்தால் கட்டளை பிறப்பித்த பின்னரும் தமிழ் தெரியாமல் தமிழர்கள் உள்ள இடத்தில் வேலை பார்க்கின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் அரச வேலைக்கு தகைமைகளே கேட்கின்றனர். ஆனால் ஆங்கில அறிவே இல்லாத இவர்களை போன்ற அதிகாரிகளை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர்.
இலக்கு தகடு அனுப்பாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறு, தற்காலிக இலக்க தகட்டுடன் உரிய ஆவணங்களை தராதது அரசாங்கத்தின் தவறு, அதற்கு தண்டப்பணம் அறிவடுவது அரசாங்கத்தின் தவறு, போதிய மொழித்திறன் அற்ற அதிகாரிகளை வேலைக்கு சேர்ப்பது அரசாங்கத்தின் தவறு, ஆனால் தண்டனை பெறுவது மட்டும் எங்களை போன்ற பொது மக்களா? என பாதிக்கப்பட்ட இளைஞன் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.jvpnews.com/community/04/172037

No comments:

Post a Comment