Tuesday, May 1, 2018

பாதி தலையுடன் வாழும் மனிதர்


கரணம் தப்பினால் மரணம் என கூறுவார்கள். அப்படி மரணத்திn வாசல்வரை சென்று திரும்பியவர்கள் மிகச்சிலரே. இதனை அதிக்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.
அப்படி அதிக்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்கள் பற்றிய தகவல்தான் இது.
குழந்தைகள்
எப்பொழுதுமே குழந்தைகள் அவர்கள் இஸ்டத்திற்கு விளையாடட்டும் என வீட்டுவிட கூடாது. அடிக்கடி அவர்களை கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் ஏதாவது ஏடாகூடமாக செய்துவிடுவார்கள். அப்படியான சம்பவம்தான் இது. உலகின் எங்கோ ஒரு பகுதியில் இது நடந்தாலும் பகீர் என இருக்க்ன்றது.
இரண்டு சிறுவர்கள் தலையில் ஆப்பிள் பழத்தை வைத்து அம்பு எய்தி விளையாண்டிருக்கிறார்கள் . அதில் ஒரு சிறுவன் எய்த அம்பு இன்னொரு சிறுவனின் கண்களை குத்தி ஒரு அடி அளவுள்ள கம்பி தலைக்குள்ளே நுழைந்து விட்டது. ஆப்பிளை குறிவைத்து எய்த அம்பு தவறுதலாக சிறுவனின் கண்களை பதம்பார்த்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர்பிழைத்துவிட்டான்.

போக்குவரத்து
கார் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற வாகனத்தில் இந்த அஸ்பெஸ்டாஸ் தகடுகளை வைத்து கொண்டு போயிருக்கிறார்கள். அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம் சட்டன் ப்ரேக் போட அதிலிருந்த அஸ்பெஸ்டாஸ் பின்னால் வந்து கொண்டிருந்த கார் மீது மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் கார் வழியாகவே உள் நுழைந்து ஊடுருவி வெளியே வந்துவிட்டது.
நல்ல வேளையாக இந்த விபத்தின் போது ஓட்டினர் இருக்கையில் மட்டுமே ஒரு நபர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.

மலையின் இடுக்கில் கை சிக்கியதால் 127 மணிநேரத்தை கழித்த நபர்
இண்டியானா பகுதியைச் சேர்ந்தவர் ரால்ட்சன். கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவருக்கு ட்ரெக்கிங் செல்வது அதுவும் ஆபத்தான இடங்களுக்கு சவாலான பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் அதிகம் இருந்தது. இதனால் அவர் வேலையை விட்டுவிட்டு ட்ரெக்கிங் செல்ல கிளம்பிவிட்டார்.
க்ளோரடாவில் இருக்கும் மலைப்பிரதேசங்கள் முழுவதும் ஏறி இறங்கியிருக்கிறார் ரால்ட்சன். கிட்டத்தட்ட 55 மாநிலங்களில் உள்ள மலைகளை ஏறி சாதனைப் படைத்திருக்கிறார் இவர்.
2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் உட்டாஹ் அமைந்திருக்கும் செங்குத்தான மலையில் ஏறியபோது திடிரென்று கால் இடறி இரண்டு பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறார். இவரது வலது கை பெரிய கல்லின் இடுக்குகளில் சிக்கிக் கொள்கிறது.
மேலே ஏறவும் முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல் தன்னைக் யாராவது வந்து தன்னை மீட்பார்கள் என காத்திருக்கிறார். மிகப்பெரிய மலை அங்கே வெளியே நின்று கொண்டிருந்தாலே மற்றவர்களுக்கு தெரிவது கடினம் இதில் ரால்ட்சன் உள்ளே பாறைகளின் இடுக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார் .கிட்டத்தட்ட ஐந்தரை நாட்கள் அந்தரத்தில் பாறைகளுக்கு இடுக்கில் காத்திருந்தார். இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என நினைத்தவர் தான் கொண்டு வந்த கூர்மையான கத்தியாலேயே இடுக்கில் சிக்கியிருக்கும் தன் கையை வெட்டினார். முழங்கைக்கு கீழே அங்கேயே சிக்கியிருக்க உயிரைமட்டும் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்திருக்கிறார் ரால்ட்சன்.
ரால்ட்சன் இந்த கதையைத் தழுவி 127 ஹவர்ஸ் என்ற திரைப்படம் கூட எடுக்கப்பட்டிருக்கிறது.

ஷார்க் கடித்தும் உயிர்தப்பிய பெண்
மெக்கீலா மெடீனா என்ற பதினான்கு வயதுடைய சிறுமி கடலில் கடற்கரையோரம் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தன் முதுகில் ஏதோ படுவது போல இருக்கவே உடனேயே நீந்தி கரைக்குச் சென்றிருக்கிறார் அங்கே அவரது முதுகை பார்த்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாம். அவரது முதுகில் ஷார்க் கடித்ததற்கான அடையாளம் இருந்திருக்கிறது.
மிக லேசான காயமாகத்தான் ஷார்க்கின் கடி இருந்திருக்கிறது. இதற்காக எந்த மருத்துவ சிகிச்சை கூட எடுக்கவில்லையாம் மெக்கீலா.

கழுத்தில் கத்தி பாய்ந்தபோதும் உயிர்பிழைத்தவர்
22 வயதான ஜூலியா பப்புவா என்ற பெண் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது வழிமறித்த திருடர்கள் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்திருக்கிறார். வீட்டில் வந்து பிறகு தான் அவரது பின் கழுத்துப் பகுதியில் கத்தி குத்தப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரைப் பார்த்த மருத்துவர்களே அதிர்ந்து விட்டார்களாம். இன்னும் ஒரு இன்ச் ஆளமாக சென்றிருந்தால் கூட முதுகுத் தண்டையே பாதித்திருக்கும் என கூறிருக்கிறார்கள். அதோடு எப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது என்பது குறித்தும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பின் ஒரு வழியாக கழுத்தில் சிக்கியிருந்த கத்தி அகற்றப்பட்டு சுமார் பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பின் ஜூலியா பப்புவா வீடு திரும்பியுள்ளார்.

ஆணி தலையில் பாய்ந்தும் உயிருடன் உள்ளவர்
மீன் பிடிக்க பயன்படுகிற ஒரு வகையான கேஸ் மூலமாக இயக்கப்படுகிற துப்பாக்கியை பயன்படுத்தி ஏரியில் இருக்கிற மீன்களை பிடிப்பார்களாம். அதிலிருந்து கூர்மையான ஆணி வெளிவரும்மாம். அப்படி மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது தலையில் எதிர்பாராத விதமாக இந்த ஆணி மாட்டிக் கொண்டிருக்கிறது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது சுமார் பதினெட்டு இன்ச் கொண்ட ஆணி அந்த இளைஞனின் மண்டையோட்டில் ஊடுறுவி சென்றிருந்ததாம். சுமார் மூன்று மணி நேர அறுவை சிகிச்சையினை மேற்கொண்டு அதனை அகற்றியிருக்கிறார்கள். இவ்வளவு விரைவாக அவர் மீண்டு வருவார் என்று நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டார்களாம்.

விமானத்தி இருந்து கீழே விழுந்த பெண் உயிருடன் பிழத்த அதிசயம்
வெஸ்னா வுலோவிக் என்ற பெண் விமானப் பணிப்பெண்ணாக இருந்திருக்கிறார். இவர் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமான விபத்து ஏற்பட்டு விமானம் நொறுங்கி விழுந்திருக்கிறது. இதில் பயணித்த பலரும் இறந்துவிட்டார்கள் சுமார் 33000 அடி உயரத்தில் இருந்து பாராஷூட் கூட கீழே விழுந்த வெஸ்னா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய 66 வது வயதில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

பாதி தலையுடன் வாழும் மனிதர்
கார்லோஸ் என்பவர் கார் விபத்தில் சிக்கிக் கொண்டபோது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படஉடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் எலும்பு, சதை, திசுக்கள் பெரும்பளவு சேதமடைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதனால் அவரின் பாதி தலையை வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. எனினும் கார்லோஸ் இன்னமும் தன் காதல் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்.

பத்து நாட்கள் அமேசான் காட்டில் தனித்திருந்த பெண்
இந்த சம்பவம் 1971 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது அமேசான் காட்டிற்கு அருகில் பெருவியன் என்ற பகுதியில் விமனம் சென்று கொண்டிருந்த போது விமானம் விபத்திற்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இதில் தப்பிய பதினேழு வயதான ஜூலியன் கோப்சீ என்கின்ற சிறுமி அடந்த காட்டுப் பகுதியில் சுமார் பத்து நாட்கள் வரை வெளியேற முடியாமல் தவித்திருக்கிறார். பின்னர் மீட்புப்படையினர் சென்று அவரை மீட்டிருக்கிறார்கள்.


http://www.viduppu.com/entertainment/04/168473?ref=ls_d_gossip

No comments:

Post a Comment