Thursday, May 10, 2018

இளம் பெண்ணின் பாடலை ரசித்த சீன- வடகொரியா ஜனாதிபதிகள்: பிளாஷ்பேக்! அபூர்வ வீடியோ


எப்படி கிம் ஜாங் உன்னும் சீன அதிபர் Xi Jinping-ம் நண்பர்களாக இருக்கிறார்களோ அதே போல் இரு ஜனாதிபதிகளின் தந்தைகளும் நண்பர்களாக இருந்த ஆச்சரிய செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல் சீன ஜனாதிபதியின் மனைவி அவரை மணக்கும்முன் ஜனாதிபதியின் தந்தை மற்றும் கிம்மின் தந்தையின் முன் மேடையில் பாடும் மிக அரிய வீடியோ ஒன்று வெளியாகி ஆச்சரியப்பட வைத்துள்ளது.
35 ஆண்டுகளுக்குமுன் படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் இரண்டு தலைவர்களின் தந்தைமார்களும் பின்னாளில் இந்நாள் சீன ஜனாதிபதியின் மனைவியாக ஆன Peng Liyuan மேடையில் பாடும் காட்சியை ஒன்றாக அமர்ந்து ரசிக்கின்றனர்.

அந்தக் காட்சியில் இரு தலைவர்களுக்குமிடையிலான நட்பு அப்பட்டமாகத் தெரிவதை யாராலும் மறுக்க முடியாது.
பிந்நாளில் சீனாவின் முதல் பெண்மணியாக மாறிய Peng Liyuan 20 வயதாக இருக்கும்போது வட கொரிய கிராமிய பாடலாகிய 'flower-selling girl' என்னும் பாடலை மாண்டரின் மற்றும் கொரிய மொழிகளில் பாடுவதை அந்த வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோ 1983 ஆம் ஆண்டு கிம்மின் தந்தை சீனாவுக்கு சென்றபோது எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் முதல் பெண்மணியாகிய Peng Liyuan ஒரு பிரபல பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.



http://news.lankasri.com/othercountries/03/178478?ref=ls_d_world

No comments:

Post a Comment