Saturday, May 12, 2018

நாள் முழுக்க உட்கார்ந்து வேலை பாக்குறீங்களா? அப்போ இதை நிச்சயம் படிங்க


தற்போதைய சூழலில் பலரும் ஒரே இடத்தில் கணினி முன்னால் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு பணிபுரிகிறார்கள்.
அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் பொழுது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
  • சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
  • நாம் உட்காந்திருக்கும் பொழுதும் தலையை குனியும்பொழுதும் ஆக்சிஜன் அளவு நுரையீரலுக்கு செல்வது குறைகிறது. அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  • உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்
  • இரண்டு மணி நேரத்துக்கு இடையில் சிறிது நேரம் நடைபயணம் மேற்கொள்வது உடலுக்கு நலம் பெயர்க்கும்.
  • மாடிக்கு ஏறும் போதும், இறங்கும் போதும் லிப்டுகளை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்தினால் அது உயிர்சக்தியை அதிகப்படுத்தும்.
  • நின்றும் அமர்ந்தும் வேலையைத் தொடரும் மேஜைகளை (sitting and standing desk) பயன்படுத்தலாம்.
  • அதிகமாக தண்ணீர் குடிப்பது நம் அலுவலகச் சூழலில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்க்க உதவி செய்கிறது.

No comments:

Post a Comment