Tuesday, May 29, 2018

பேரணியை எதிர்த்து மாபெரும் பேரணி: பெர்லினில் மக்கள் வெள்ளம்

பெர்லினில் வலது சாரியினர் (AfD) நடத்திய பேரணியை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்திக் காட்ட பெர்லின் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
AfD பேரணியில் 5000 பேர் கலந்து கொள்ள, அவர்களை எதிர்த்து திரண்ட பேரணியில் 20,000 பேர் கலந்து கொண்டு அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மோதல்களைத் தவிர்ப்பதற்காக ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இரண்டு கூட்டத்தினரையும் தனித்தனியே பிரித்து வைப்பதற்காக பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

AfDயின் புலம்பெயர்தல் எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு மற்றும் இஸ்லாம் எதிர்ப்பு செய்திகள் ஆகியவை AfDக்கு ஜேர்மனியின் மூன்றாவது பிரதான
எதிர்க்கட்சி என்னும் நிலையைப் பெற்றுத்தந்தாலும், அதற்குப் பிறகு நாடாளுமன்ற விவாதங்களில் அதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை.
AfD ஆதரவாளர்கள் பெர்லினில் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து நாடாளுமன்றம் அருகில் வரையிலும் பேரணி நடத்தினர்.

GETTY IMAGE

அவர்களை எதிர்த்து பேரணி நடத்தியவர்களோ 2015 அகதிகள் பிரச்சினைக்குப் பிறகு ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை முன்வைத்தனர்.
இப்பேரணியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பெரும்பாலும் முதியவர்களைக் கொண்ட AfD ஆதரவாளர்களோ ஜேர்மனி மற்றும் AfD கொடிகளை அசைத்தவாறும், எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும், மெர்க்கலின் சர்வாதிகாரம் அல்ல என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியவாறு பேரணியில் பங்குபெற்றனர்.

AFP
AFP
AFP

http://news.lankasri.com/germany/03/179819?ref=ls_d_germany

No comments:

Post a Comment