Monday, May 21, 2018

ராஜிதவின் கருத்து குறித்து நாடாளுமன்றில் கேள்வி?


அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட உள்ளது.
நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது கூட்டு எதிர்க்கட்சியினர் இது குறித்து கேள்வி எழுப்பத் தீர்மானித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தாத இந்த அரசாங்கம், வடக்கில் புலிகளின் நினைவேந்தல்களை நடாத்த அனுமதி வழங்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் பாடசாலைகளில் மாகாண மற்றும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது.
பாடசாலை, பல்கலைக்கழக மாணவ மாணவியர் முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு புலிகளுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்பய்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானது. வட மாகாண ஆளுனர் இந்த விடயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தான ஓர் நிலைமையாகும்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிப்பது அரசாங்கத்தின் நல்லிணக்கமா?
உலகின் கொடிய பயங்கரவாதியான பிரபாகரனை ஐயா என விழித்து, படைவீரர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சரவை பேச்சாளர் ராஜித வெளியிட்ட கருத்து குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இந்த விடயங்கள் குறித்து நாடாளுமன்றில் நாளை கேள்வி எழுப்பப்படும் என ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/183206?ref=home-latest

No comments:

Post a Comment