Saturday, May 5, 2018

ஆங்கிலத் தேர்வு கடினமானதாக இருந்தது: ஜேர்மன் மாணவர்கள் புகார்


சுதந்திர தேவி சிலை முதல் பிரெக்சிட் வரையான தலைப்புகளிலிருந்து இடம்பெற்ற கேள்விகளைக் கொண்ட ஆங்கிலத் தேர்வு கடினமானதாக, நியாயமற்றதாக இருந்ததாக தெரிவித்துள்ள ஜேர்மன் மாணவர்கள் ஒரு ஆன்லைன் மனு மூலம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலக்கிய ஆங்கிலமும் பழங்கால வார்த்தைகளும் அதிகம் இடம்பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்வு நமது நாடுகளில் உள்ள பள்ளி இறுதி தேர்வுக்கு சமமாகும். கேள்விகளில் ஒன்றில் பிரெக்சிட் குறித்த இரு கார்ட்டூன்களைக் குறித்து கருத்துக் கூறும்படி கேட்கப்பட்டிருந்தது.
அந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமானால் ஆங்கில அறிவோடு தற்கால நடப்புகள் குறித்த அறிவும் இருக்க வேண்டும்.
ஜேர்மன் இளைஞர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான விடயங்களில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என ஒரு கருத்துக்காகவாவது கூறலாம் ஏனென்றால் நல்ல வேளையாக விவசாய கொள்கை குறித்து கேள்விகள் கேட்கப்படவில்லை.
31,000 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அவர்கள் அளித்துள்ள புகாரில் 35,000 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
நியாமற்ற முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உதாரணத்திற்கு ஒரு கேள்வியைக் கூறலாம், கவிதை நடையில் சுதந்திர தேவி சிலையைக் குறித்து கொடுக்கப்பட்டிருந்த வர்ணனையைப் புரிந்துகொள்வது மாணவர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.
மேலும் 1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி பழங்காலத்து ஆங்கிலத்தில் இருந்ததாகவும் அது குறித்த கேள்வி சரியாக விளக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை தேர்வு முடிவுக்காக காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள மொழியிலாளர் ஒருவர் யாரும் மோசமான தேர்வு முடிவுகளைப் பெறப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் தேர்வு நியாயமற்றதாக இருந்தது என்று கூறியுள்ள நிலையில் அரசு அதிகாரிகளோ தேர்வு முறையாகத்தான் இருந்ததாகக் கூறி கல்வித்துறையை ஆதரித்துள்ளனர்.

http://news.lankasri.com/germany/03/178055?ref=ls_d_germany

No comments:

Post a Comment