Monday, May 14, 2018

வெளிநாட்டில் இலங்கையர்கள் பலர் கைது - இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை


சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை இலங்கை அதிகாரிகளினால் சந்திக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரின் தகவலை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட நிலையில், 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
குறித்த அனைவரும் கைது செய்யப்பட்ட ஐநது நாட்களின் பின்னர் மலேசியா அரசு தகவல் வெளியிட்டிருந்தது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவேறு சட்டங்களின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை, இலங்கை அதிகாரிகளினால் சந்திக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தேர்தலுக்குப் பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் சந்திக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், நாளை அவர்களுடனான சந்திப்புக்கு ஒழுங்கு செய்ய முடியும் என நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/182560?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment