Wednesday, May 9, 2018

மைத்­தி­ரி­யால் தமிழ் மக்களிற்கு காத்திருந்த பெரும் ஏமாற்றம்


அடுத்த இரண்­டாண்­டு­க­ளுக்கு அர­சின் நகர்வு எப்­படி அமை­யப் போகின்­றது என்­ப­தைக் கூறும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் உரை தமிழ் மக்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­ற­மா­கவே அமைந்­துள்­ளது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில் அரச தலை­வர் தனது உரை யில் எதை­யும் குறிப்­பி­ட­வில்லை.
ஐ.நா. மனித உரி மை­கள் சபை­யில் இலங்கை இணை அனு ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் நடை­மு­றைப்­ப­டுத்­தல் தொடர்­பா­க­வும் மைத்­தி­ரி­பால சிறி­சேன வாய் திறக்­க­வில்லை.
தேக்­க­ம­டைந்­துள்ள புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் மீள ஆரம்­பிப்­பது தொடர்­பிலோ, அர­சி­யல் தீர்வு தொடர்­பா­கவோ அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது கொள்கை விளக்க உரை­யில் குறிப்­பி­டு­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அந்த விட­யங்­க­ளைத் தொட்­டுக்­கூட பார்க்­காத அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, பொரு­ளா­தார நலன் குறித்தே அதி­கம் உரை­யாற்­றி­னார்.
அரசு இது­வரை நிறை­வேற்­றிய முக்­கிய சட்­டங்­கள், சாத­னை­கள் என்­ப­வற்றை அரச தலை­வர் தனது உரை­யில் பட்­டி­ய­லிட்­டார். அதில் நாடா­ளு­மன்று அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டமை தொடர்­பில் மைத்­திரி தனது கொள்­கைப் பேச்­சில் எத­னை­யும் குறிப்­பி­ட­வில்லை. எதிர்­கா­லத்­தில் முன்­னெ­டுக்­க­வுள்ள விட­யப் பரப்­புக்­குள்­ளும், அர­சி­யல் தீர்வு தொடர்­பாக அவர் கருத்து எத­னை­யும் கூற­வில்லை.
அரச தலை­வர் தனது உரை­யில், மக்­க­ளின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றும், உண்­மை­யான மக்­கள் நேய செயற்­திட்­டங்­க­ளின் நிபந்­த­னை­க­ளாக 15 விட­யங்­க­ளைக் குறிப்­பிட்­டி­ருந்­தார். அதில், தமிழ் மக்­க­ளின் சம உரி­மை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட வேண­வாக்­களை ஏற்­றுக்­கொள்­ளல், முஸ்­லிம் மக்­க­ளின் நலன் மற்­றும் சமூக, கலா­சார தேவை­களை உறு­தி­செய்­தல், மலை­யக தமிழ் மக்­க­ளின் பொரு­ளா­தார, சமூக நிலையை மேம்­ப­டுத்­தல், நாட்­டின் பெரும்­பான்மை சமூ­க­மான சிங்­கள மக்­க­ளின் கலா­சார உரி­மை­களை பலப்­ப­டுத்தி, உறுதி செய்து தேசத்­தின் அடை­யா­ளத்தை வலுப்­ப­டுத்­தல் என்ற விட­யங்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளார்.
அவற்­றுக்கு மேல­தி­க­மாக, ‘நிலை­யான நாட்­டின் அடித்­த­ளம் தேசிய நல்­லி­ணக்­கமே ஆகும். உண்­மை­யான தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மா­யின் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட அர­சி­யல் தீர்­மா­னங்­களை இயற்­றத்­தக்க கட்­ட­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும்.
அந்த நோக்கை வெற்றி கொள்­வ­தற்கு தற்­போது செய­லில் இருந்­து­வ­ரும் மாகாண சபை முறை­மையை மேலும் பலப்­ப­டுத்­து­வது காலத்­தின் தேவை­யா­கும் என்று நான் நம்­பு­கி­றேன்.
எவ்­வா­றான விமர்­ச­னங்­கள் எழுந்த போதி­லும் வடக்கு – கிழக்கு மக்­க­ளின் பொறு­மை­யி­ழப்­பினை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டுத்த வேண்­டு­மா­யின் மக்­க­ளின் விருப்­பத்­தை­யும் இணக்­கப்­பாட்­டை­யும் பெற்ற அர­சி­யல் வேலைத்­திட்­ட­மொன்­றினை ஆரம்­பித்­தல் வேண்­டும்.
பௌதீக ரீதி­யில் நாம் பயங்­க­ர­வா­தி­களை தோற்­க­டித்த போதி­லும் அவர்­க­ளின் கொள்­கை­யினை முழு­மை­யாக தோல்­வி­யு­றச் செய்­வ­தற்கு இன்­னும் முடி­யாது போயி­ருக்­கின்­றது. கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளாக பன்­னாட்டு ரீதி­யி­லான ஒத்­து­ழைப்பை பெற்று அந்­தக் கொள்­கை­யினை தோல்­வி­யு­றச் செய்­வ­தற்கே நான் முயற்­சித்து வந்­தேன் என்­றும் அரச தலை­வர் குறிப்­பிட்­டார்.
http://www.jvpnews.com/srilanka/04/172000

No comments:

Post a Comment