Friday, May 25, 2018

16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்


பிரபல ஹாலிவுட் நடிகரான மோர்கன் ப்ரீமேன் 16 நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மோர்கன் ப்ரீமேன்(80). சிறந்த குணச்சித்திர நடிகரான மோர்கன் ப்ரீமேன் தி ஸ்டீர்ட் ஸ்மார்ட், ‘மில்லியன் டாலர் பேபி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கோல்கடன் குளோப் விருது, ஆஸ்கார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படடதால், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


அப்போது அவர் படிப்பிடிப்பின் போது 16 நடிகைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய சிஎன்என் சேனல் புலனாய்வு தெரிவிக்கையில், நடிகர் மோர்கன் ப்ரீமானுடன் நடித்த 16 நடிகைகளிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம்.
அப்போது 8 நடிகைகள் மோர்கனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகப் கூறினர். மற்ற 8 நடிகைகள் அவரின் மோசமான செயல்களாலும், பாலியல் சீண்டல்களாகும் பாதிக்கப்பட்டதாக கூறினர்.
மேலும் ப்ரீமேன், தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவதற்காகவும், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு விளம்பரம் தேடும் முயற்சியிலும் எங்களில் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளங்களில் மிகவும் ஆபசமாக பேசுவது, அந்தரங்க விஷயங்களை பேசுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது போன்ற பல்வேறு மோசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இந்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், ப்ரீமேன் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/usa/03/179618?ref=ls_d_special

No comments:

Post a Comment