Friday, April 27, 2018

வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் தெருவோரத்தில்! சோகமான உண்மை சம்பவத்தின் பின்னணி


இந்தியாவில் முகநூல் பதிவு ஒன்றின் மூலம் வீடின்றி தெருவில் படுத்து வாழ்ந்த தாத்தா ஒருவருக்கு வீடு கிடைத்துள்ளது.
சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வின் முழு பதிவு இதோ,
தெருவோரம் வாழ்ந்த இந்த தாத்தா சாதாரமாணவர் அல்ல. இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலையில் படித்து பட்டம் பெற்றவர்.
இவரது பெயர் ராஜா சிங் (76) தனது 60 வயது வரை வெளிநாட்டில் வாழ்ந்து வந்தவர், தனது சகோதரருக்காக இந்தியா திரும்பி உள்ளார்.
சகோதரரும் இவரும் இணைந்து பல்வேறு தொழில்கள் செய்த நிலையில், இவரது சகோதரரின் குடிப்பழக்கத்தால் தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இருந்தாலும் தனது கடுமையான உழைப்பால் தன் மகன்கள் இருவரையும் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.
வெளிநாடு சென்ற மகன்கள் அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒருவர் இங்கிலாந்திலும் இன்னொருவரும் அமெரிக்காவிலும் நிரந்தரமாக தங்கி விட்டனர். தன் நல்வாழ்விற்கு உதவிய தகப்பனை மறந்தும் விட்டனர்.

தனது மனைவியும் இறந்த பின் டெல்லியில் உள்ள தெருக்களில் வாழத் தொடங்கியிருக்கிறார் இந்த ஆக்ஸ்போர்ட பட்டதாரியான ராஜா சிங்.
கடும் வறுமையிலும் பிச்சை எடுத்து வாழ்வதை விரும்பாத இவர், விசா கோரி வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.
தினமும் பொதுக் கழிப்பிடத்தில் குளித்து விட்டு டெல்லியில் உள்ள அனுமந்த் மந்திர அருகே உள்ள தூதரக அலுவலகத்தில் விண்ணப்ப வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு பின்னர், இரவில் ரயில் நிலையங்களிலோ பிளாட்பாரங்களிலோ உறங்குகிறார்.
உணவுக்கு வழியில்லாத பல பொழுதுகளில் கூட யாரிடமும் யாசகம் கேட்காத இந்த தாத்தாவைப் பற்றி அவினாஷ் சிங் எனும் ஒருவர் இவரது படங்களுடன் முகநூலில் பதிவேற்றினார்.
இதனையடுத்து இவருக்கு பலரும் உதவி செய்ய தயாராக உள்ள நிலையில், தற்போது குருநானக் சுக்லா எனும் இடத்தில் இவருக்கு தங்க இடம் கிடைத்திருக்கிறது.
அங்குள்ள ஆட்டோக்காரர் ஒருவர் ராஜா சிங்கை தனது ஆட்டோவில் தூதரக அலுவலகத்தில் கொண்டு விடுகிறார், திரும்பவும் கூட்டி செல்கிறார்.
தினமும் மதியம் வீடு திரும்பும் ராஜ் சிங் யாரிடமும் யாசகம் பெற மறுத்து, இந்த வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என்கிற கோட்பாட்டில் உறுதியாக இருப்பது அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்துகிறது.

http://news.lankasri.com/india/03/177430?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment