Friday, April 27, 2018

இரண்டு பொலிசாரை கொலை செய்து விட்டு சிரித்த அகதி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்


அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மெக்சிகோவை சேர்ந்த அகதி இரண்டு பொலிசாரை கொலை செய்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லூயிஸ் மொனோராய் பிராக்கமொண்டீஸ் (37) என நபர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார்.
போதை மருந்துகளை கடத்திய குற்றத்துக்காக இரண்டு முறை லூயிஸ் நாடுகடத்தப்பட்டும் மீண்டும் 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவுள் நுழைந்துள்ளார்.
பின்னர் அவரை பிடிக்க முயன்ற டேனி ஓலிவர் மற்றும் மைக்கேட் டேவிஸ் ஆகிய இரண்டு பொலிசாரை லூயிஸ் சுட்டுக்கொன்றுள்ளார்.

இதையடுத்து பொலிசார் லூயிஸை கைது செய்த நிலையில் அவர் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இரு மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் லூயிஸ் ஆஜரான போது எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி நீதிமன்றத்தில் சிரித்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன, இதையடுத்து லூயிஸுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லூயில் கொலையில் அவருக்கு உதவியதாக அவரின் மனைவி ஜனிலீ மொன்ராய்க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி லூயிஸுக்கான தீர்ப்பை வாசிக்கும் போது அவர் கத்தி கூச்சலிட்டதால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://news.lankasri.com/usa/03/177410?ref=ls_d_world

No comments:

Post a Comment